கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 2. வான்சிறப்பு

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.
    Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitin
    தமிழ் உரை

    மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.

  2. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.
    Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasi
    தமிழ் உரை

    மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.

  3. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatru
    தமிழ் உரை

    மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.

  4. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.
    Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhai
    தமிழ் உரை

    பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.

  5. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.
    Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukku
    தமிழ் உரை

    எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.

  6. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.
    Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhai
    தமிழ் உரை

    உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.

  7. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.
    Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaal
    தமிழ் உரை

    மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.

  8. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.
    Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhu
    தமிழ் உரை

    மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.

  9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.
    Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Thenin
    தமிழ் உரை

    மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.

  10. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentu
    தமிழ் உரை

    மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.

  11. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.
    Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal · Peyyenap Peyyum Mazhai
    தமிழ் உரை

    தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.

  12. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.
    Iyalpulik Kolochchum Mannavan Naatta · Peyalum Vilaiyulum Thokku
    தமிழ் உரை

    அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.

  13. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.
    Vaanokki Vaazhum Ulakellaam Mannavan · Kol Nokki Vaazhung Kuti
    தமிழ் உரை

    உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.

  14. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனையது உடைத்து.
    Seerutaich Chelvar Sirudhuni Maari · Varangoorn Thanaiyadhu Utaiththu
    தமிழ் உரை

    புகழ்பெற்ற செல்வத்தை உடையாரது சிறிதாகிய வறுமை, உலகைக் காக்கும் மேகம் வறுமையடைந்தாற்போன்ற தன்மையதாம். அவ்வறுமை சிறிது காலமிருந்து விரைவில் நீங்க, மீண்டும் அவர் ஈகையை மேற்கொள்வர்.

  15. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.
    Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu · En Aatrung Kollo Ulaku
    தமிழ் உரை

    தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.

  16. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.
    Muyakkitaith Thanvali Pozhap Pasapputra · Pedhai Perumazhaik Kan
    தமிழ் உரை

    அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?

  17. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
    Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Ali
    தமிழ் உரை

    தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.

  18. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.
    Pennin Perundhakka Yaavula Karpennum · Thinmaiun Taakap Perin
    தமிழ் உரை

    இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?

  19. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.
    Mangalam Enpa Manaimaatchi Matru · Adhan Nankalam Nanmakkat Peru
    தமிழ் உரை

    மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.

  20. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
    Manaiththakka Maanputaiyal Aakiththar Kontaan · Valaththakkaal Vaazhkkaith Thunai
    தமிழ் உரை

    இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் …”

    1. தான்நல்கா தாகி விடின்.
    2. துப்பாய தூஉம் மழை.
    3. வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    4. தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    விடை

    D · தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. · குறள் 11

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் …”

    1. துப்பாய தூஉம் மழை.
    2. வான்இன்று அமையாது ஒழுக்கு.
    3. எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    4. வாரி வளங்குன்றிக் கால்.
    விடை

    B · வான்இன்று அமையாது ஒழுக்கு. · குறள் 20

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து …”

    1. உள்நின்று உடற்றும் பசி.
    2. வான்இன்று அமையாது ஒழுக்கு.
    3. வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    4. பசும்புல் தலைகாண்பு அரிது.
    விடை

    A · உள்நின்று உடற்றும் பசி. · குறள் 13

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி