Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue
12. நடுவு நிலைமை · Impartiality
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், பகைவராகவோ நண்பராகவோ இல்லாதவர், நண்பர் ஆகிய மூவரிடத்தும் தம் முறைமையை விடாது நடந்து கொண்டால், நடுவுநிலைமையென்று சொல்லப்படும் அறம் ஒன்றுமே நன்றாகும்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
நடுவுநிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம் போன்று அழிவில்லாமல் அவன் வழித்தோன்றல்களுக்கும் பயனுடையதாகும்.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
அன்றே யொழிய விடல்.
தீங்கின்றி நன்மையே தருவதாயினும், நடுவுநிலைமையை விட்டுவிடுதலால் வரும் செல்வத்தை அப்பொழுதே ஒழித்துவிட வேண்டும்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
எச்சத்தாற் காணப்ப படும்.
இவர் நடுவுநிலைமை உடையவர், இவர் நடுவுநிலைமை அற்றவர் என்பதை அவரவர்க்கு நன்மக்கள் உள்ளமையாலும் இல்லாமையாலும் அறியலாம்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கோடாமை சான்றோர்க் கணி.
தீவினையால் கேடும் நல்வினையால் நன்மையும் யாவர்க்கும் முன்னமேயே அமைந்து கிடைந்தன. அதனை உணர்ந்து அவைகாரணமாக மனத்தில் தவறாது நடுவுநிற்றலே சான்றோர்க்கு அழகாகும்.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
நடுவொரீஇ அல்ல செயின்.
ஒருவன் தன் நெஞ்சம் நடுவுநிலையிலிருந்து விலகி நடுவல்லவற்றை எண்ணுமாயின் ‘நான் கெடுவேன்’ என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பாகக் கொள்ளல்வேண்டும்.
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவுநிலையில் நின்று அறத்தில் தங்கியவனின் வறுமையை உயர்ந்தோர் வறுமையென்று கருதமாட்டார்; அதனைச் செல்வமென்றே கொள்ளுவர்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
கோடாமை சான்றோர்க் கணி.
முன்னே சமனாக நின்று, பின் தன்னில் வைத்த பாரத்தைச் சரியாக எடையிடும் துலாக்கோல்போல் அமைந்து, ஒருபக்கம் சாயாது இருத்தல் சான்றோர்க்கு அணியாகும்.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
உட்கோட்டம் இன்மை பெறின்.
மனத்தில் கோட்டமின்மையை உறுதியாகப்பெற்று, சொல்லில் கோணுதல் இல்லாமை செப்பம் ஆகும். ஒருபால் கோணாத மனத்தோடு, அறமிருந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
பிறவும் தமபோல் செயின்.
பிறர் பொருளையும் தம்பொருள்போலக் கருதிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வார்க்கு நல்ல முறையாம்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



