وِزارتِ تعلیٖم، حکوٗمتِ ہِند · سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل (CICT)، چنئی
کاشی تَمِل سَنگَمَم 5.0
کاشی تَمِل سَنگَمَم 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل (CICT)، چنئی · وِزارتِ تعلیٖم، حکوٗمتِ ہِند
اِنٹَرفیسُک یہِ ترجمہٕ چھُ وُنہِ مُسَوَدٕ تہٕ CICT چھُ اَمیُک جٲیِزٕ ہؠوان۔ English
واپس
ترجمہٕ

22 زَبانَن منٛز تِرُکُّرَل

سٲری 1,330 شعر، أٹھِمہِ شیڈیوٗلٕچَن زَبانَن منٛز CICT سٕنٛدؠو ترجمَو سان۔ باب تہٕ زَبان ژٲرِو۔

تِرُکُّرَل مُطالعٲتی ساتھِس پۄچھِو ←

→ پَتھ کُنبرونٛہہ کُن ←
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

128. குறிப்பறிவுறுத்தல் · The Reading of the Signs

کَمپیوٗٹَر چھُ تَمِل مَتَن پَران۔
1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
நீ சொல்லாது மறைத்தாலும் உன்னைக் கடந்து உன் மையுண்ட கண்கள் எனக்குச் சொல்லும் நிகழ்வு ஒன்று உண்டு; அதனை நீயே தெளிவாய்ச் சொல்வாயாக.
1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.
என் கண் நிறைந்த அழகினையும் மூங்கிலை ஒத்த தோளினையும் உடைய பேதைக்கு மகளிரிடத்து நிறைந்த மடமை அவ்வளவின்றி மிகுந்தது. அதனால்தான், இல்லாத பிரிவினை நினைத்து அவள் அஞ்சுகிறாள்.
1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.
மாலையாகக் கோக்கப்பட்ட பளிங்கு மணியகத்திருந்து வெளியில் புலனாகும் நூல்போல இப்பெண்ணின் அணியகத் துக்கிடந்து வெளியில் புலனாகும் குறிப்பொன்று உண்டு. அதனை நான் அறிய இயலவில்லை.
1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
முகையின் மொக்குள் உள்ளதாய் வெளியில் புலனாகாத நறுமணம்போல இப்பெண் என்னோடு நகக்கருதும் புன்னகையில் உள்ளதாய், வெளியில் புலனாகாத குறிப்பு ஒன்று உண்டு.
1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
நெருங்கிய வளையல்களை அணிந்தவள் என்னிடம் இல்லாத ஒன்றை உட்கொண்டு அதுகாரணமாக என்னிடமிருந்து மறைக்கும் குறிப்பு, என் துயரைத் தீர்க்கும் மருந்தொன்றை உடையது.
1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.
காதலர் வந்து தம் பிரிவால் உண்டான துன்பத்தினை மிகவும் மாற்றி நாம் மகிழும்வண்ணம் கலக்கின்ற கலவி, துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து, அவரது அன்பின்மையை நினைக்கும் தன்மை உடையது.
1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
குளிர்ந்த துறையை உடையவன் நம்மை உடலால் கூடியிருந்து உள்ளத்தால் பிரிந்தமையை நம்மைவிட இவ்வளையல்கள் முன்னே அறிந்தன.
1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.
நேற்று எம் காதலர் பிரிந்துபோயினார்; அப்பிரிவால் யாம் மேனி பசந்து ஏழுநாட்கள் ஆயின.
1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.
காதலர் பிரிந்தாரானால் நான் இங்கிருந்தால் இவை நில்லாவெனத் தன் வளையல்களைப் பார்த்து, இவை மெலியுமெனத் தன் தோள்களையும் பார்த்து, இவையிரண்டும் நிகழாமல் நடந்து காத்தல்வேண்டுமெனத் தன் அடியையும் நோக்கி அவ்வாறு அவள் செய்த குறிப்பு உடன்போக்காய் இருந்தது.
1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.
பெண்கள் தம் காமநோயினை வாயால் சொல்லாது கண்ணால் சொல்லி, அது தீர்க்க வேண்டுமென்று காதலரை வேண்டாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை வேண்டல் தமக்கியல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்தென்று அறிந்தோர் கூறுவர்.

اَبواب

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

ترجمہٕ © سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل، چنئی · CC BY 4.0 · تِرُکُّرَل کثیٖر لِسٲنی ایپ رٔنگؠ تہِ دستیاب

اِقدام Government of India وِزارتِ تعلیٖم، حکوٗمتِ ہِند
عمل دَرآمد سینٹرل اِنسٹی ٹیوٗٹ آف کلاسیکل تَمِل (CICT)، چنئی