Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love
133. ஊடலுவகை · The Pleasures of Temporary Variance
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
வல்லது அவர்அளிக்கு மாறு.
அவரிடம் எத்தவறும் இல்லையானாலும் நம்மிடம் அவர் மிகுதியாக அன்புசெலுத்தல் ஊடுதலை விளைக்கவல்லதாகின்றது.
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
வாடினும் பாடு பெறும்.
ஊடல்காரணமாக நம்மிடம் தோன்றும் சிறிய துன்பம் காதலர் காட்டும் அன்பு சற்று வாடுமானாலும் பேரின்பம் தரும்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
நீரியைந் தன்னார் அகத்து.
நிலத்தொடு நீர் கலந்தாற்போன்று ஒற்றுமையுடைய காதலரிடம் புலத்தலைக்காட்டிலும் நமக்கு இன்பம்தரும் தேவர் உலகம் எங்காவது உண்டா? இல்லை.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
உள்ளம் உடைக்கும் படை.
புலவியைக் கருதிய என் உள்ளத்தை உடைக்கும் படைக்கலம் காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய புலவியிடம் உள்ளதாம்.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
ஆடவர் தம்மிடம் தவறு இல்லாதவராயினும் தவறு செய்தவர்போல் ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாதபோது, அவர்க்கு அவ்வூடலால் பெறும் இன்பம் அளவற்றது; கூறுதற்கு அரியது.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
புணர்தலின் ஊடல் இனிது.
மேலும் மேலும் உண்பதைக் காட்டிலும் முன் உண்டது அறுதல் இன்பம் தரும்; அதுபோலக் காமத்திற்கு மேலும் புணர்தலைக் காட்டிலும் ஊடுதல் இன்பம் தரும்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
கூடலிற் காணப் படும்.
ஊடலில் தோற்றவர் வென்றார்; அது அப்பொழுது அறியப் படாதாயினும் பின் புணர்ச்சியின்போது அவரால் உணரப்படும்; ஊடலுக்குப் பிறகு நிகழும் புணர்ச்சி அவர்களுக்குப் பேரின்பம் அளிக்கும்.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
கூடலில் தோன்றிய உப்பு.
இப்போது இவள் நெற்றி வியர்க்கும்வண்ணம் புணர்ச்சியில் பெற்ற இன்பத்தை இன்னும் ஒருமுறை இவள் ஊடுதலால் பெற இயலுமா?
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
நீடுக மன்னோ இரா.
ஒளிவீசும் அணிகலன்களை உடையவள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக. அவ்வாறு அவள் ஊடியிருத்தற்கும் அதனைத் தீர்க்க யாம் அவளிடம் இரங்கியிருத்தற்கும் வேண்டிய காலம் பெறும்வகையில் இந்த இரவு விடியாது நீடிக்குமாக.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
கூடி முயங்கப் பெறின்.
காம நுகர்ச்சிக்கு இன்பமாவது அதனைத் துய்த்தற்கு உரியார் தம்முள் ஊடுதலாகும். அவ்வூடுதலுக்கு இன்பம் அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடித் தழுவல் இயலுமாயின் அத்தழுவல்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



