মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

17. அழுக்காறாமை · Not Envying

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை என்னும் குற்றமில்லாத இயல்பைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக்கொள்க.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
யாரிடமும் பொறாமையிலிருந்து நீங்குதலை ஒருவன் பெறுவானேயானால், அதனையொத்த சீரிய பேறு வேறெதுவும் இல்லை.
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பிறரிடம் செல்வம் கண்டபோது அதனால் மகிழாது பொறாமைகொள்வான் அறம், செல்வம் ஆகியவற்றைத் தனக்கு வேண்டாதவன் என்று கருதப்படுவான்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
தீநெறியால் தமக்குத் துன்பம் வருதலை அறிந்து, அறிவுடையார் அழுக்காறு காரணமாக அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
பகைவர் இல்லாதவழியும் அழுக்காறு கேடு பயக்குமாதலால் அழுக்காறு உடையவர்க்குப் பகைவர் தேவையில்லை; கேட்டை விளைவிக்க அதுவே போதும்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
பொறாமையென்று சொல்லப்படும் ஒப்பில்லாத பாவி, தன்னை உடையவனின் செல்வத்தைக் கெடுத்து, அவனை நரகத்தில் செலுத்திவிடும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
அழுக்காற்றைச் செய்து பெரியவர் ஆயினவர் யாரும் இல்லை; அழுக்காற்றைச் செய்யாது ஆக்கத்தினின்று நீங்கியவரும் இல்லை.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti