വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ · സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ
കാശി തമിഴ് സംഗമം 5.0
കാശി തമിഴ് സംഗമം 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ · വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ
ഇന്റർഫേസിന്റെ ഈ പരിഭാഷ ഒരു കരട് രൂപമാണ്; CICT ഇത് പരിശോധിച്ചുവരികയാണ്. English
പിന്നോട്ട്
പരിഭാഷകൾ

22 ഭാഷകളിൽ തിരുക്കുറൾ

എട്ടാം പട്ടികയിലെ ഭാഷകളിലേക്കുള്ള CICT-യുടെ പരിഭാഷകളോടൊപ്പം 1,330 കുറളുകളും. ഒരു അധ്യായവും ഒരു ഭാഷയും തിരഞ്ഞെടുക്കുക.

തിരുക്കുറൾ പഠനസഹായിയോട് ചോദിക്കുക →

← മുമ്പത്തേത്അടുത്തത് →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

24. புகழ் · Renown

തമിഴ് കുറൾ കമ്പ്യൂട്ടർ ശബ്ദത്തിലാണ് വായിക്കുന്നത്.
231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
வறியவர்க்கு ஈதலைச் செய்க; அதனால் பெறும் புகழுடன் வாழ்க; அப்புகழைத்தவிர மக்கள் உயிர்க்குப் பயன் வேறொன்றும் இல்லை.
232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ்.
உலகில் ஒன்று உரைப்பார் போற்றுவது எல்லாம் வறியவர்க்கு அவர் வேண்டிய ஒன்றைத் தருவாரிடம் நிலைத்து நிற்கும் புகழேயாகும்.
233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.
இணையற்ற, உயர்ந்த புகழைத்தவிர உலகில் அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை.
234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு.
ஒருவன் இவ்வுலகம் உள்ளவரை அழியாது நிற்கும் புகழைப் பெறுவானாயின் தேவர் உலகம் அவனையல்லாமல் அறிஞர்களைப் போற்றாது.
235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
புகழுடம்பிற்கு ஆக்கமாகும் பூதவுடம்பின் கேடும், புகழுடம்பு உளதாகும் இறப்பும் சதுரப்பாடு உடையவர்களுக்கல்லாமல் பிறருக்கு அரிதாகும்.
236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
மக்களாய்ப் பிறந்தால் புகழ்பெறுதற்குரிய குணத்தோடு பிறத்தல் வேண்டும். அக்குணமில்லாதார் பிறப்பதைக்காட்டிலும் பிறவாதிருத்தலே நல்லது.
237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன்?
புகழோடு வாழ இயலாதவர் தம்மை நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்ந்து பேசுவாரை நொந்துகொள்வது எதனால்?
238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
புகழ் என்னும் எச்சத்தைப் பெறாவிட்டால் அது உலகில் உள்ளோர் யாவர்க்கும் வசையென்று நல்லோர் கூறுவர்.
239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
புகழற்ற உடம்பைச் சுமந்த நிலத்தில் பழிப்பில்லாத வளப்பத்தையுடைய விளைச்சல் குறையும்.
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.
பழியில்லாமல் வாழ்பவரே உயிர்வாழ்பவராவர்; புகழில்லாமல் வாழ்பவர் இறந்தோராவார்.

അധ്യായങ്ങൾ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0 · തിരുക്കുറൾ ബഹുഭാഷാ ആപ്പായും ലഭ്യമാണ്

സംരംഭം Government of India വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ
നിർവഹണം സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ