अणकार
22 भासांनी तिरुक्कुरल
आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue
33. கொல்லாமை · Not killing
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
பிறவினை எல்லாந் தரும்.
அறச்செயல் எதுவென்று கேட்டால், எவ்வுயிரையும் கொல்லாமையேயாகும்; அவ்வாறு கொல்லுதல் பிற தீமைகளை எல்லாம் விளைவிக்கும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
தான் உண்பதைப் பலவுயிர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவற்றைக் காத்தல், அறநூலார் தொகுத்துக் கொடுத்துள்ள அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறமாகும்.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
பின்சாரப் பொய்யாமை நன்று.
அறங்களுள் தனக்கு ஒப்புமையின்றித் தானேயாக நல்லது கொல்லாமையெனும் அறமாகும். பொய்யாமை அதன் பின்னே நிற்க நல்லது. பொய்யாமையென்னும் அறமும் புறக்கணிக்கத் தக்கதன்று.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
கொல்லாமை சூழும் நெறி.
நல்ல நெறியென்று சொல்லப்படுவது எதுவென்று கேட்டால் அது எவ்வுயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்க எண்ணும் நெறியாகும்.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
கொல்லாமை சூழ்வான் தலை.
பிறவித் துன்பத்திற்கு அஞ்சித் துறவறம் மேற்கொண்டார் யாவருள்ளும் உயிர்களைக் கொல்லுதற்கு அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தை மறவாதிருப்பவன் உயர்ந்தவனாவான்.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொல்லாமையை நோன்பாக மேற்கொண்டு நடப்பவனின் வாழும் காலத்தை உயிரைப் பறிக்கும் கூற்றமானது குறைக்காது; நீட்டிக்கும்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
இன்னுயிர் நீக்கும் வினை.
தனது உயிர் உடலிலிருந்து நீங்கிப் போகுமானாலும் தான் வேறோர் இனிய உயிரை அதன் உடலிலிருந்து நீக்கும் தொழிலைச்செய்தல் கூடாது.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
கொன்றாகும் ஆக்கங் கடை.
வேள்வியில் உயிர்களைக் கொன்றால் பெருஞ்செல்வம் கிடைக்குமென்று சொல்லப் பட்டாலும், சான்றோர்க்கு ஓர் உயிரைக் கொல்லுவதால் அடையும் செல்வம் இழிவானதாகும்.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
புன்மை தெரிவா ரகத்து.
கொலைத் தொழிலைச்செய்யும் மாந்தர், அறிவுடையார் கருத்தில் புலைத் தொழிலைச் செய்பவரே ஆவர்.
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோயுடம்புடன் வறுமைமிக்க இழிந்த வாழ்க்கை உடையவரை, முற்பிறவியில் உயிர்களை அவற்றின் உடல்களிலிருந்து நீக்கியவர் என்று சொல்லுவார்கள்.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध



