Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Translations

Thirukkural in 22 languages

All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.

← PreviousNext →
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue

36. மெய்யுணர்தல் · Truth-Conciousness

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
இன்பமில்லாத பிறப்பு, மெய்ப்பொருள் அல்லாதனவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்கத்தால் உண்டாவதாகும்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மயக்கத்திலிருந்து விலகி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அம்மெய்யுணர்வு இருளை நீக்கி இன்பத்தைத் தரும்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றார்க்கு நிலவுலகினும் விண்ணுலகம் அடைதற்கு அருகில் உளதாகும்.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மெய்யுணர்வு அற்றார் புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வைத் தம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவாரேனும் அதனால் எப்பயனும் இல்லை.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எந்தவொரு பொருளும் எத்தன்மையுடையதாகத் தோன்றினாலும் அப்பொருளிலிருந்து மெய்யான பொருளைக் காண்பதே அறிவின் செயலாகும்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
இப்பிறவியில் பலரிடம் பலகாலம் பயின்று மெய்யுணர்வுபெற்றார் மீண்டும் பிறவிபெற்று இங்கு வராத நெறியை எய்துவர்.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறப்பிற்குக் காரணமாகிய மயக்கம் நீங்குதற்கு, சிறப்பு என்னும் செவ்விய பொருளைக் காண்பதே ஒருவனுக்கு மெய்யுணர்தலாகும்.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
ஒருவன் எல்லாப் பொருள்களுக்கும் சார்பாகிய செம்பொருளை உணர்ந்து, பற்றையெல்லாம் நீக்கி, ஒழுக வல்லவனானால், அவனை முன் நெருங்குபவையாய் நின்ற துன்பங்கள் யாவும் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் நெருங்கமாட்டா.
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மெய்யுணர்வு பெற்றார்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயரும்கூடக்கெடுதலால், அவர்களுக்குத் துன்பங்களும் நேர்வதில்லை.

Chapters

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App

An initiative of Government of India Ministry of Education
Implemented by Central Institute of Classical Tamil
In association with Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti