শিক্ষা মন্ত্রক, ভারত সরকার · সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই · শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
ইন্টারফেসের এই অনুবাদটি একটি খসড়া; CICT এটি পর্যালোচনা করছে। English
ফিরে যান
অনুবাদ

22টি ভাষায় তিরুক্কুরাল

অষ্টম তফসিলের ভাষাগুলিতে CICT-র অনুবাদসহ সব 1,330টি কুরাল। একটি অধ্যায় ও একটি ভাষা বেছে নিন।

তিরুক্কুরাল পাঠসঙ্গীকে জিজ্ঞাসা করুন →

← পূর্ববর্তীপরবর্তী →
அறத்துப்பால் · Virtue › ஊழியல் · Fate

38. ஊழ் · Fate

তামিল পাঠটি কম্পিউটারের কণ্ঠে পড়া হয়।
371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.
ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய ஊழால் முயற்சி உண்டாகும், சோம்பல் நீங்கும்; பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாகும்.
372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.
இழத்தற்குக் காரணமாகிய ஊழ் வரும்போது, அது அவனை அறிவற்றவனாக்கும்; ஆக்கம் தரும் ஊழ் வரும்போது, அது அவனது அறிவை விரிவாக்கும்.
373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.
அறிவைப் போக்கும் ஊழால் பீடிக்கப்பட்டவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல்கள் பலவற்றைக் கற்றானாயினும் அவ்வூழின் காரணமாகப் பேதைமை உணர்வே மிகும்.
374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.
உலகில் ஊழினாலாகிய இயற்கை இருவகையாம்; ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு. அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வம் உடையராதற்கு ஆகாது. செல்வம் உடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது.
375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.
செல்வத்தைச் சேர்த்தற்கு, ஊழ் காரணமாக, நல்லவை யெல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவையெல்லாம் நல்லவாய் ஆக்கும்.
376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.
தனக்கு ஊழல்லாத பொருள்களை ஒருவன் வருந்திக் காப்பாற்றினாலும் அவனிடத்து அப்பொருள்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஊழால் தனதாகிய பொருள்களை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை தன்னைவிட்டுப்போகா.
377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
ஐம்பொறிகளால் துய்க்கும் பொருள்கள் கோடியை முயற்சியால் சேர்த்தார்க்கும் தெய்வம் வகுத்த வகையால் அல்லது துய்த்தல் இயலாது.
378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.
ஊழ்கள் உண்டாக்கும் துன்பங்களை உண்டாக்காது கழியுமானால், வறுமை காரணமாக இன்பம் அடையாதவர் துறவறத்தை நாடிச் செல்வர்.
379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்?
நல்வினை காரணமாக விளையும் இன்பங்களை நல்லனவென்று அனுபவிப்பவர் தீவினை காரணமாக விளையும் துன்பங்களை அவ்வாறு அனுபவியாது வருந்துவது ஏன்?
380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.
ஊழினை விலக்குதற்கு ஒருவன் ஏதாவதொரு வழியைக் கருதினாலும் அவ்வழியாகவே வந்து முற்பட்டு நிற்கும் ஊழைக்காட்டினும் வலியுடையது ஏதும் இல்லை.

অধ্যায়সমূহ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরাল বহুভাষিক অ্যাপ হিসেবেও পাওয়া যায়

উদ্যোগে Government of India শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
রূপায়ণে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই