মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

67. வினைத்திட்பம் · Power in Action

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
வினையின் திண்மையென்று சொல்லப்படுவது ஒரு செயலை மேற்கொள்வானின் மனத்தினது திண்மையாகும். மற்றவையெல்லாம் வினைக்குத் திண்மைகள் என்று சொல்லப்படமாட்டா.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
முன் வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரது முடிவு, பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை பழுதுபட்டால் அதற்குத் தளராமையுமாகிய இரண்டின் வழியென்பர் அறிவுடையோர்.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
செய்யப்படும் செயல் இறுதியில் புலப்படுமாறு முதலில் மறைவாகச் செய்வதே திட்பமாகும். அவ்வாறின்றி, அச்செயல் இடையில் புலப்படுமானால் அது செயலை மேற்கொண்டவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
யாம் இச்செயலை இம்முறையில் செய்வோம் என்று நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிதாகும்; ஆனால், அதனை அம்முறையில் செய்தல் யாவர்க்கும் அரியதாகும்.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
சிந்தனை ஆற்றலானும் பிற தகுதிகளானும் மாட்சிமைப்பட்ட அமைச்சனது வினைத்திட்பம், அவனது செயலால் அரசனுக்குப் புகழும் செல்வமும் சேர்வதால், யாவராலும் மதிக்கப்படும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
எண்ணுபவர் வினைத்திட்பம் உடையவரானால், எண்ணிய பொருள்களையெல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருண்டுசெல்லும் பெரிய தேருக்கு அச்சின் ஆணிபோல, வினையில் வல்லவரை உடையது உலகம்; அதனால், அவர் வடிவில் சிறியராய் இருத்தல் கண்டு இகழ்தல் கூடாது.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
தெளிந்த மனத்தோடு செய்யத்துணிந்த வினையைத் திட்பத்துடன் தளராது, நீட்டிக்காது செய்துமுடித்தல் வேண்டும்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
மேற்கொள்ளும் முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும், அதனால் தளராது முடிவில் இன்பம்தரும் செயலைத் திட்பம் உடையவராய்ச் செய்துமுடித்தல் வேண்டும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
வினைத்திட்பமே சிறந்ததென்று அறிந்து அதனைக் கொள்ளாத அமைச்சரை, வேறு திட்பங்களெல்லாம் உடையராயினும் உயர்ந்தோர் நன்கு மதிக்கமாட்டார்.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti