ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱟᱞᱚᱭ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ · ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ (CICT), ᱪᱮᱱᱱᱟᱭ
ᱠᱟᱥᱤ ᱛᱟᱢᱤᱞ ᱥᱚᱝᱜᱚᱢᱚᱢ 5.0
ᱠᱟᱥᱤ ᱛᱟᱢᱤᱞ ᱥᱚᱝᱜᱚᱢᱚᱢ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ (CICT), ᱪᱮᱱᱱᱟᱭ · ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱟᱞᱚᱭ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ
ᱤᱱᱴᱚᱨᱯᱷᱮᱥ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱶᱟ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱰᱨᱟᱯᱷᱴ ᱠᱟᱱᱟ ᱟᱨ CICT ᱦᱚᱛᱮᱛᱮ ᱧᱮᱞ ᱵᱤᱰᱟᱹᱣᱚᱜ ᱠᱟᱱᱟ ᱾ English
ᱛᱟᱭᱚᱢ
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ

22 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ

ᱡᱚᱛᱚ 1,330 ᱠᱩᱨᱚᱞ, 8 ᱟᱱᱟᱜ ᱚᱱᱩᱥᱩᱪᱤ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚᱛᱮ CICT ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶ ᱾ ᱢᱤᱫ ᱚᱫᱷᱭᱟᱭ ᱟᱨ ᱢᱤᱫ ᱯᱟᱹᱨᱥᱤ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ ᱾

ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱜᱟᱛᱮ ᱠᱩᱞᱤ ᱢᱮ →

← ᱢᱟᱲᱟᱝᱟᱜᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

84. பேதைமை · Folly

ᱛᱟᱢᱤᱞ ᱫᱚ ᱠᱚᱢᱯᱭᱩᱴᱚᱨ ᱟᱲᱟᱝ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣᱚᱜᱼᱟ ᱾
831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.
பேதைமை என்பது யாதென்று கேட்பின், அது தனக்குக் கேடுபயப்பனவற்றை ஏற்றுக் கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல் ஆகும்.
832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.
ஒருவனுக்குப் பேதைமை யாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது தனக்காகாத செயல்களை விரும்பிச் செய்தல்.
833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்
நாணவேண்டியவற்றிற்கு நாணாமையும், நாடவேண்டியவற்றை நாடாமையும், யாவரிடமும் இரக்கமற்ற சொல்லும் செயலும் உடைமையும், பேணவேண்டியவற்றைப் பேணாமையும் பேதை எப்போதும் இயல்பாகச் செய்யும் தொழிலாகும்.
834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல்.
நல்ல நூல்களை ஓதியும், அதனால் வரும் பயனை உணர்ந்தும், அதனைப் பிறர்க்கு உரைத்தும், தான் மனம், மொழி, மெய்களை அடக்கி நடவாத பேதை போன்ற அறிவீனர்கள் உலகில் இல்லை.
835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.
பேதையானவன் வரும் பிறவிகளிலெல்லாம் தான் துன்புறப்போகும் நரகத்தை, இவ்வொரு பிறவியிலேயே செய்துகொள்ள வல்லவனாம்.
836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.
செயல்திறன் அற்ற அறிவீனன் ஒரு செயலை மேற் கொள்வானானால் அச்செயலும் கெட்டு, அவனும் தளைபூணும் (விலங்கு அணியும்) நிலையேற்படும்.
837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.
பேதையானவன் பெரிய செல்வத்தை அடைவானானால், அவனோடு தொடர்பற்றவர் எல்லாம் பெறுவர்; உறவினர் உணவும் பெறாமல் பசித்திருப்பர்.
838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின்.
அறிவீனன் ஒருவன் தன் கையில் ஏதேனும் ஓர் உடைமையைப் பெற்றானாயின் அவன் மயங்கித் தடுமாறுதல், பித்தன் ஒருவன் மதுவுண்டு தடுமாறுதல் போன்றதாகும்.
839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.
அறிவீனர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் நட்பு மிக இனியது; ஏனெனில், அவர்கள் பிரியும்போது அவர் இருவருக்கும் விளையும் துன்பம் ஏதுமில்லை.
840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.
சான்றோர் அவையில் அறிவீனன் ஒருவன் புகுதல் என்பது, தூய்மையற்றவற்றை மிதித்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைத்தாற்போன்றது.

ᱚᱫᱷᱭᱟᱭ ᱠᱚ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0 · ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱢᱟᱞᱴᱤᱞᱤᱝᱜᱩᱣᱟᱞ ᱮᱯ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱼᱟ

ᱮᱦᱚᱵᱤᱡ Government of India ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱟᱞᱚᱭ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ
ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱣᱤᱡ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ (CICT), ᱪᱮᱱᱱᱟᱭ