Ministry of Education, Government of India · Central Institute of Classical Tamil (CICT), Chennai
Kashi Tamil Sangamam 5.0
Kashi Tamil Sangamam 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
Central Institute of Classical Tamil (CICT), Chennai · Ministry of Education, Government of India
Apply now
Back
Thirukkural

Thirukkural study companion

Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.

The Thirukkural speaks of this in the chapter 2. வான்சிறப்பு · The Blessing of Rain

The couplets closest to your question

The Tamil is read by a computer voice.
  1. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    Sirappotu Poosanai Sellaadhu Vaanam · Varakkumel Vaanorkkum Eentu
    The earth, beneath a barren sky,
    Would offerings for the gods deny.
    Tamil commentary

    மழை பெய்யாமல்போனால் விண்ணுலகத்தார்க்கும் இவ்வுலகில் செய்யப்படும் விழாவும் பூசையும் நடைபெறமாட்டா.

  2. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    Vaannindru Ulakam Vazhangi Varudhalaal · Thaanamizhdham Endrunarar Paatru
    The genial rain ambrosia call:
    The world but lasts while rain shall fall.
    Tamil commentary

    மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.

  3. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.
    Visumpin Thuliveezhin Allaalmar Raange · Pasumpul Thalaikaanpu Aridhu
    No grassy blade its head will rear,
    If from the cloud no drop appear.
    Tamil commentary

    மழையின் துளி விழுந்தால் மட்டுமே பசும்புல்லின் தலையையும் காணமுடியும்; மழை பெய்யாவிடில், அதனைக் காணுதலும் இயலாததகும்.

  4. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.
    Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum · Vaanindru Amaiyaadhu Ozhukku
    Water is life that comes from rain
    Sans rain our duties go in vain.
    Tamil commentary

    எவ்வளவு மேல்நிலையில் உள்ளவர்க்கும் நீரில்லாமல் உலக இன்பங்களைத் துய்த்தல் இயலாது; அந்நீர் இடையறாது பெய்தலும் வானில்லாமல் நடவாது.

  5. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.
    Thaanam Thavamirantum Thangaa Viyanulakam · Vaanam Vazhangaa Thenin
    Were heaven above to fail below
    Nor alms nor penance earth would show.
    Tamil commentary

    மழை பெய்யவில்லையானால், அகன்ற உலகில் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் இல்லாமல் போகும்.

  6. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.
    Erin Uzhaaar Uzhavar Puyalennum · Vaari Valangundrik Kaal
    Unless the fruitful shower descend,
    The ploughman's sacred toil must end.
    Tamil commentary

    மழையென்னும் வருவாய் தன் பயன் குறையுமானால், உழவர்கள் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்.

  7. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.
    Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth · Thuppaaya Thooum Mazhai
    The rain begets the food we eat
    And forms a food and drink concrete.
    Tamil commentary

    உண்பார்க்கு நல்ல உணவை உண்டாக்கித்தந்து, அதனை உண்கின்றவர்க்குத் தானும் உணவாவதும் மழை.

  8. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.
    Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange · Etuppadhooum Ellaam Mazhai
    Destruction it may sometimes pour,
    But only rain can life restore.
    Tamil commentary

    பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதிருந்து உலகில் வாழ்வாரைத் துன்புறுத்துவதும், அவ்வாறு துன்புற்றார்க்குத் துணையாகப் பெய்து நலம் செய்வதும் ஆகிய எல்லாம் செய்யும் வல்லமை உடையது மழை.

  9. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.
    Vinindru Poippin Virineer Viyanulakaththu · Ulnindru Utatrum Pasi
    Let clouds their visits stay, and dearth
    Distresses all the sea-girt earth.
    Tamil commentary

    மழை தேவைப்படும் காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற அகன்ற உலகில் பசியானது நிலைபெற்று உயிர்களைத் துன்புறுத்தும்.

  10. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.
    Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili · Thaannalkaa Thaaki Vitin
    The ocean's wealth will waste away,
    Except the cloud its stores repay.
    Tamil commentary

    மேகமானது தன்னைக் குறைத்துக் கடலில் பெய்யாது போகுமானால், அளவற்ற பெருங்கடலும் தன்னியல்பு குறையும்.

  11. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல்.
    Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun · Vaansudhai Vannam Kolal
    Before the bright be brilliant light
    Before the muff be mortar white.
    Tamil commentary

    அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.

  12. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.
    Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuraiyum · Theyvaththul Vaikkap Patum
    He is a man of divine worth
    Who lives in ideal home on earth.
    Tamil commentary

    இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.

  13. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.
    Vaanuyar Thotram Evanseyyum Thannenjam · Thaanari Kutrap Patin
    Of what avail are sky-high shows
    When guild the conscience gnaws and knows.
    Tamil commentary

    தான் குற்றமென்று அறிந்ததனிடம் ஒருவனது நெஞ்சு தாழ்ச்சி அடையுமானால் அவனுக்கு வான்போல் உயர்ந்த தவவேடமானது என்ன பயனைச் செய்யும்?

  14. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
    Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman · Oruvarkan Nindrozhuku Vaan
    This cupid aims at me alone;
    Knows he not my pallor and pain?
    Tamil commentary

    காமம் துய்த்தற்குரிய இருவரிடமும் ஒப்பநில்லாது ஒருவரிடமே நின்று துன்புறுத்தும். காமன் அவ்விடத்தில் பசப்பாலாய பருவரலும் படர்மிகுதியும் அறியமாட்டானா?

  15. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.
    Vakaimaanta Vaazhkkaiyum Vaanporulum Ennaam · Thakaimaanta Thakkaar Serin
    If holy mighty sages frown
    Stately gifts and stores who can own?
    Tamil commentary

    அரிய பெருமையுடைய தவம்செய்த பெரியோர் சினம் அடைவாராயின், உறுப்பழகுடைய அரசனது ஆட்சியும் அவன் சேர்த்துவைத்த பெரும்பொருளும் என்னாகும்? முற்றும் அழிந்துவிடும்.

  16. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
    Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku · Veezhvaar Alikkum Ali
    The lover - and -beloved's self-givings
    Are like rains to living beings.
    Tamil commentary

    தம்மை விரும்பும் மகளிர்க்குத் தாம் விரும்பும் கணவர் அளவறிந்து செய்யும் தலையளி, தன்னையே எதிர்பார்த்து உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்யும் மழையைப் போன்றது.

  17. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.
    Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan · Nalvirundhu Vaanath Thavarkku
    Who tends a guest and looks for next
    Is a welcome guest in heaven's feast.
    Tamil commentary

    தன்னிடமிருந்து செல்லுகின்ற விருந்தைப்பேணிப் பின் வரவிருக்கின்ற விருந்தை எதிர்பார்த்து அதனோடு உண்ணக் காத்திருப்பான் விண்ணிலிருப்பார்க்கு நல்ல விருந்தாவான்.

  18. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும்.
    Yaan Enadhu Ennum Serukku · Aruppaan Vaanorkku Uyarndha Ulakam
    Who curbs the pride of I and mine
    Gets a world rare for gods to gain.
    Tamil commentary

    உடலை யானென்றும், பொருளை எனதென்றும் கருதி அவற்றில் பற்றுக்கொள்ளும் அறியாமையைப் போக்குபவன் வானோர்க்கும் அடைய இயலாத வீட்டுலகத்தை அடைவான்.

  19. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
    Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan · Indhirane Saalung Kari
    Indra himself has cause to say
    How great the power ascetics' sway.
    Tamil commentary

    ஐந்து புலன்களையும் அடக்கிய துறவியின் வலிமைக்கு, அகன்ற வானத்தில் உள்ளோரின் தலைவனாகிய இந்திரனே தக்க எடுத்துக்காட்டாவான்.

  20. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik · Kotuththum Kolalventum Natpu
    Take as good friend at any price
    The nobly born who shun disgrace.
    Tamil commentary

    நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.

Test yourself

Choose the second line of each couplet, then open the answer.

  1. Choose the correct second line of this couplet.

    “Water is life that comes from rain …”

    1. Sans rain our duties go in vain.
    2. If from the cloud no drop appear.
    3. And forms a food and drink concrete.
    4. Distresses all the sea-girt earth.
    Answer

    A · Sans rain our duties go in vain. · Couplet 20

  2. Choose the correct second line of this couplet.

    “The earth, beneath a barren sky, …”

    1. Distresses all the sea-girt earth.
    2. Would offerings for the gods deny.
    3. But only rain can life restore.
    4. Except the cloud its stores repay.
    Answer

    B · Would offerings for the gods deny. · Couplet 18

  3. Choose the correct second line of this couplet.

    “No grassy blade its head will rear, …”

    1. Would offerings for the gods deny.
    2. Nor alms nor penance earth would show.
    3. If from the cloud no drop appear.
    4. Except the cloud its stores repay.
    Answer

    C · If from the cloud no drop appear. · Couplet 16

Practice test →

Start from a subject

The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.

Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0

An initiative of Government of India Ministry of Education, Government of India
Implemented by Central Institute of Classical Tamil (CICT), Chennai