Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 30. வாய்மை · Veracity
The couplets closest to your question
-
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum · Theemai Ilaadha SolalIf "What is truth"? the question be,
It is to speak out evil-free.Tamil commentary
வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
-
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha · Nanmai Payakkum EninE'en falsehood may for truth suffice,
When good it brings removing vice.Tamil commentary
மற்றவர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யான சொற்களும் மெய்யானவையாம்.
-
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum · Vaaimaiyin Nalla PiraOf all the things we here have seen
Nothing surpasses Truth serene !Tamil commentary
யாம் மெய்யான நூல்களாகக் கண்ட யாவற்றுள்ளும் எவ்விதத்திலும் வாய்மையினும் சிறந்த அறமாகச் சொல்லப்படும் அறம் ஏதுமில்லை.
-
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.Purandhooimai Neeraan Amaiyum Akandhooimai · Vaaimaiyaal Kaanap PatumWater makes you pure outward
Truth renders you pure inward.Tamil commentary
ஒருவனுக்கு உடலின் தூய்மை நீரால் உண்டாகும்; அதுபோல, உள்ளத்தின் தூய்மை வாய்மையால் உண்டாகும்.
-
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu · Thaananjey Vaarin ThalaiTo speak the truth from heart sincere
Is more than giving and living austere.Tamil commentary
ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்வாரைக்காட்டிலும் உயர்ந்தவனாவான்.
-
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar · Ullaththu Lellaam UlanHe lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.Tamil commentary
ஒருவன் தன் உள்ளத்திற்கேற்பப் பொய்கூறாது நடப்பானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களிலெல்லாம் உள்ளவனாவான்.
-
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.Poiyaamai Poiyaamai Aatrin Arampira · Seyyaamai Seyyaamai NandruLie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.Tamil commentary
ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்வானானால் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தல் நல்லதாம்.
-
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.Thannenj Charivadhu Poiyarka Poiththapin · Thannenje Thannaich ChutumLet not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.Tamil commentary
ஒருவன் தன் உள்ளம் அறிந்தவொன்றைப் பிறர் அறியவில்லையென்று பொய்த்தல் கூடாது; அவ்வாறு பொய்த்தானாயின் அவனது உள்ளமே அவனுக்குத் துன்பத்தைத் தரும்.
-
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.Poiyaamai Anna Pukazhillai Eyyaamai · Ellaa Aramun TharumNot to lie brings all the praise
All virtues from Truth arise.Tamil commentary
ஒருவனுக்குப் பொய்யாமையையொத்த புகழுக்குக் காரணமாவது வேறு ஒன்றும் இல்லை; அது அவனுக்கு மெய் வருந்தாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும்.
-
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.Ellaa Vilakkum Vilakkalla Saandrorkkup · Poiyaa Vilakke VilakkuAll lights are not lights for the wise;
Truth light is light bright like sun-lightTamil commentary
புறத்திருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா. சான்றோர்க்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்.
-
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.Ozhukkamum Vaaimaiyum Naanum Im · Moondrum Izhukkaar Kutippiran ThaarThe noble-born lack not these three:
Good conduct, truth and modesty.Tamil commentary
உயர்ந்த குடியில் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றிலும் வழுவமாட்டார்.
-
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin · Vaaimai Vazhiyuraippaan PanpuThe true envoy of three virtues
Is pure helpful and bold in views.Tamil commentary
தன் அரசன் சொல்லிய சொல்லை அவன் சொல்லியவாறு வேற்றரசனிடம் சென்று சொல்லுவானுக்கு வேண்டிய பண்புகளாவன: பொருள், காமம் போன்றவற்றால் கவரப்படாத தூய்மை, தனக்கு அவரமைச்சர் துணையாகும் தன்மை, சொல்லவேண்டிய எதையும் சொல்லும் துணிவுடைமை, இம்மூன்றோடுகூடிய வாய்மை.
-
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண்.Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu · Aindhusaalpu Oondriya ThoonLove, truth, regard, modesty, grace
These five are virtue's resting place.Tamil commentary
உறவினர்மேல் மட்டுமன்றிப் பிறர்மேலும் கொள்ளும் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், எல்லாரிடமும் ஒப்புரவு செய்தல், கண்ணோட்டம், உண்மை கூறல் ஆகிய ஐந்தும் சால்பு என்னும் சுமையைத் தாங்கிய தூண்களாகும்.
-
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.Nakaieekai Insol Ikazhaamai Naankum · Vakaiyenpa Vaaimaik KutikkuSmile, gift, sweet words and courtesy
These four mark true nobility.Tamil commentary
எக்காலத்தும் மாறுபாடு அடையாத உயர்ந்த குடியினர்க்கு முகமலர்ச்சி, உள்ளன கொடுத்தல், இன்சொல் கூறல், வறியவரை இகழாமை ஆகிய நான்கும் உரிய கூறுகளென்று நூலோர் கூறுவர்.
-
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram · Vaaisoraa Vanka NavanThe envoy who ports the king's message
Has flawless words and heart's courage.Tamil commentary
தன் அரசன் சொல்லிவிட்ட சொற்களை வேற்றரசர்க்குச் சென்று சொல்ல உரியவன் தனக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சித் தாழ்வான சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாத திண்மை உடையவன்.
-
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum · Kulaththil Pirandhaarvaaich CholSoil's nature is seen in sprout
The worth of birth from words flow out.Tamil commentary
நிலத்தின் இயல்பை அதில் பிறந்த முளை காட்டும்; அதுபோல ஒருவர் பிறந்த குலத்தின் இயல்பை அவரது வாய்ச்சொல் காட்டும். நற்குடியில் பிறந்தார் இன்சொல்லே பேசல் வேண்டும்.
-
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye · Seydhar Kariya SeyalWhen comes the season ripe and rare
Dare and do hard things then and there.Tamil commentary
தம்மால் பெறுதற்கரிய காலம் வரும்போது, அது கழிவதற்கு முன்பே, தம்மால் செய்தற்கரிய செயலைச் செய்துமுடித்தல் வேண்டும்.
-
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.Kokkokka Koompum Paruvaththu Matradhan · Kuththokka Seerththa ItaththuIn waiting time feign peace like stork
In fighting time strike like its peck.Tamil commentary
ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
-
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின்.Aruvinai Yenpa Ulavo Karuviyaan · Kaalam Arindhu SeyinWhat is hard for him who acts
With proper means and time and tacts?Tamil commentary
ஒரு செயலை முடித்தற்கான கருவிகளுடன் செய்தற்கேற்ற காலம் அறிந்து செய்தால் ஒருவரால் செய்ய இயலாத வினைகளென்று சொல்லப்படுவன இல்லை.
-
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.Kaalam Karudhi Iruppar Kalangaadhu · Gnaalam Karudhu PavarWho want to win the world sublime
Wait unruffled biding their time.Tamil commentary
தவறாமல் உலகமெல்லாம் வெல்லக்கருதும் அரசர், வலிமை மிக்கவராயினும் அது கருதாமல், ஏற்ற காலம் வரும்வரையிலும் காத்திருப்பர்.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“If "What is truth"? the question be, …”
Answer
D · It is to speak out evil-free. · Couplet 291
-
Choose the correct second line of this couplet.
“To speak the truth from heart sincere …”
Answer
A · Is more than giving and living austere. · Couplet 295
-
Choose the correct second line of this couplet.
“Of all the things we here have seen …”
Answer
D · Nothing surpasses Truth serene ! · Couplet 300
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





