Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 104. உழவு · Farming
The couplets closest to your question
-
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal · Uzhandhum Uzhave ThalaiFarming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.Tamil commentary
பிற தொழில்களையெல்லாம் செய்து திரிந்தாலும் உலகம் இறுதியில் ஏருடையார்வழியே செல்லவேண்டும். அதனால் பல துன்பங்களைத் தருமாயினும் உழவே தலைசிறந்த தொழிலாகும்.
-
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.Erinum Nandraal Eruvitudhal Kattapin · Neerinum Nandradhan KaappuBetter manure than plough; then weed;
Than irrigating, better guard.Tamil commentary
நிலத்தில் விளையும் பயிர்க்கு உழுதலைக்காட்டிலும் எருப்பெய்தல் நல்லது; களையை நீக்கியபின்னர்ப் பயிரைக் காத்தல் நீரிடுவதினும் நல்லது.
-
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu · Ezhuvaarai Ellaam PoruththuTillers are linch-pin of mankind
Bearing the rest who cannot tend.Tamil commentary
உழுதொழிலைச் செய்ய இயலாது பிற தொழில்களை மேற்கொள்வார் யாவரையும் தாங்குதலால் உழவர்களே உலகத்தாராகிய தேருக்கு அச்சாணியாவர்.
-
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam · Thozhudhuntu Pinsel PavarThey live who live to plough and eat
The rest behind them bow and eat.Tamil commentary
யாவரும் உண்ண உழுதொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உண்மையில் தமக்கு உரியராய் வாழ்பவர்; பிறரெல்லாம் மற்றவரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவர் பின் செல்பவர்; அவர் தமக்கு உரியர் அல்லர்.
-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கு நிலை.Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum · Vittemen Paarkku NilaiShould ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.Tamil commentary
உழவரது கை உழுதொழிலைச் செய்யாது மடங்குமானால், ‘யாவரும் விரும்புவதையெல்லாம் யாம் துறந்துவிட்டோம்’ என்பார்க்கு அத்துறவறத்தில் நிற்றல் இயலாது.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“Tillers are linch-pin of mankind …”
Answer
B · Bearing the rest who cannot tend. · Couplet 1032
-
Choose the correct second line of this couplet.
“Should ploughmen sit folding their hands …”
Answer
A · Desire-free monks too suffer wants. · Couplet 1036
-
Choose the correct second line of this couplet.
“Better manure than plough; then weed; …”
Answer
C · Than irrigating, better guard. · Couplet 1038
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





