கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 62. ஆள்வினை உடைமை

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.
    Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai Pazhi
    தமிழ் உரை

    நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.

  2. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.
    Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi Tharum
    தமிழ் உரை

    நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.

  3. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
    Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi Vitum
    தமிழ் உரை

    ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.

  4. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
    Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj Cherukku
    தமிழ் உரை

    எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.

  5. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru Ulaku
    தமிழ் உரை

    வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.

  6. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.
    Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi Naal
    தமிழ் உரை

    கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.

  7. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum Thoon
    தமிழ் உரை

    தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.

  8. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.
    Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru Pavar
    தமிழ் உரை

    செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.

  9. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.
    Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli Tharum
    தமிழ் உரை

    ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.

  10. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.
    Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak Ketum
    தமிழ் உரை

    முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.

  11. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.
    Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi Vitum
    தமிழ் உரை

    ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.

  12. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.
    Ozhukkam Utaimai Kutimai Izhukkam · Izhindha Pirappaai Vitum
    தமிழ் உரை

    யாவர்க்கும் ஒழுக்கம் உடைமை குலம் உடைமையாகும்; ஒழுக்கத்தில் தவறுவோன் இழிந்த பிறவியாவான்.

  13. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.
    Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar · Utaiyadhu Utaiyaro Matru
    தமிழ் உரை

    ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; ஊக்கமில்லாதார் வேறு ஏதேனும் உடையவராவரோ? ஆகார்.

  14. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.
    Aakkam Adharvinaaich Chellum Asaivilaa · Ookka Mutaiyaa Nuzhai
    தமிழ் உரை

    துன்பத்தில் தளராத ஊக்கம் உடையவனிடம் பொருள் தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

  15. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.
    Aakkam Izhandhemendru Allaavaar Ookkam · Oruvandham Kaiththutai Yaar
    தமிழ் உரை

    நிலையான ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், இழந்தாராயினும் ‘யாம் கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார்.

  16. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.
    Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai · Veruum Pulidhaak Kurin
    தமிழ் உரை

    பெரிய உடலும் கூரிய கோடும் கொண்டதாயினும் புலி எதிர்ப்படின் யானை அச்சம் கொள்ளும்.

  17. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.
    Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu · Valliyam Ennunj Cherukku
    தமிழ் உரை

    ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகில் தாம் வள்ளல்தன்மை மிக்கவரென்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.

  18. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
    Ulluva Thellaam Uyarvullal Matradhu · Thallinun Thallaamai Neerththu
    தமிழ் உரை

    அரசர் கருதுவதெல்லாம் தம் உயர்வையே கருதல் வேண்டும்; அவ்வுயர்வு அடையப்பட வில்லையாயினும் அடையப்பட்டதாகவே மதிக்கப்படும்.

  19. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.
    Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya · Vazhukkiyum Vaayaar Solal
    தமிழ் உரை

    மறந்தும் தீயசொற்களை வாயால் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாததாகும்.

  20. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.
    Vellath Thanaiya Malarneettam Maandhardham · Ullath Thanaiyadhu Uyarvu
    தமிழ் உரை

    நீர்ப்பூக்களின் தாளின் உயரம், நின்ற நீரின் அளவினதாகும்; அதுபோல மக்களின் உயர்வு, அவரது ஊக்கத்தின் அளவினதாகும்.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து …”

    1. வாளாண்மை போலக் கெடும்.
    2. ஆள்வினை இன்மை பழி.
    3. தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    4. தாளுளாள் தாமரையி னாள்.
    விடை

    B · ஆள்வினை இன்மை பழி. · குறள் 618

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை …”

    1. தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    2. இன்மை புகுத்தி விடும்.
    3. வேளாண்மை என்னுஞ் செருக்கு.
    4. ஆள்வினை இன்மை பழி.
    விடை

    B · இன்மை புகுத்தி விடும். · குறள் 616

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே …”

    1. பெருமை முயற்சி தரும்.
    2. வேளாண்மை என்னுஞ் செருக்கு.
    3. துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    4. வாளாண்மை போலக் கெடும்.
    விடை

    B · வேளாண்மை என்னுஞ் செருக்கு. · குறள் 613

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி