திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 11. செய்ந்நன்றியறிதல்
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai · Seynnandri Kondra Makarku
தமிழ் உரை
எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்களுக்கும் உய்தல் உண்டு; ஆனால் பிறர் செய்த நன்மையைச் சிதைத்தவர்க்கு உய்தல் இல்லை.
-
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.Nandri Marappadhu Nandrandru Nandralladhu · Andre Marappadhu Nandru
தமிழ் உரை
பிறர் முன்பு செய்த நன்மையை மறப்பது ஒருவனுக்கு அறமாகாது; அவர் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறமாகும்.
-
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.Udhavi Varaiththandru Udhavi Udhavi · Seyappattaar Saalpin Varaiththu
தமிழ் உரை
கைம்மாறான உதவி முன் செய்த உதவியின் அளவினதாகாது; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவினதாகும்.
-
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.Kaalaththi Naarseydha Nandri Siridheninum · Gnaalaththin Maanap Peridhu
தமிழ் உரை
ஒருவனுக்கு உரிய காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும் காலம் கருதிச் செய்யப் பட்டமையால், அது நிலவுலகினும் மிகப் பெரிதாகும்.
-
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin · Nanmai Katalin Peridhu
தமிழ் உரை
ஒருவர்க்கு இது செய்தால் இன்னது நமக்குக் கிடைக்குமென்று, பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியாகிய ஈரமுடைமையை எடையிட்டுப் பார்த்தால், அதன் நன்மை கடலினும் பெரிதாகும்.
-
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum · Vaanakamum Aatral Aridhu
தமிழ் உரை
தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
-
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak · Kolvar Payandheri Vaar
தமிழ் உரை
தமக்குத் தினையளவு உதவியை ஒருவன் செய்வானாயினும் அதனைச் சிறிதாகக் கருதாது பனையளவினதாகக் கருதுவர் அதன் பயன் தெரிந்தவர்.
-
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும்.Kondranna Innaa Seyinum Avarseydha · Ondrunandru Ullak Ketum
தமிழ் உரை
தனக்கு முன்னொரு நன்மை செய்தவர் பின் கொல்லுதலைப் போன்ற தீமை செய்வாராயினும் அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க இல்லாமல் போகும்.
-
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.Maravarka Maasatraar Kenmai Thuravarka · Thunpaththul Thuppaayaar Natpu
தமிழ் உரை
துன்பக் காலத்துத் தமக்குப் பற்றுக்கோடாய்ச் செயல்பட்டாரது நட்பை விட்டுவிடுதல் கூடாது; அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் குற்றமற்றவர்களது கேண்மையை என்றும் மறத்தல் கூடாது.
-
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.Ezhumai Ezhupirappum Ulluvar Thangan · Vizhuman Thutaiththavar Natpu
தமிழ் உரை
தங்களையடைந்த துன்பத்தை விரைந்து நீக்கியவருடைய நட்பை ஏழேழ் பிறப்பிலும் நல்லோர் நினைப்பர்.
-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.Seydhakka Alla Seyak Ketum · Seydhakka Seyyaamai Yaanung Ketum
தமிழ் உரை
அரசன் செய்யத்தக்கன அல்லாதவற்றைச் செய்தலும், செய்யவேண்டியவற்றைச் செய்யாதிருத்தலும் அவனுக்குக் கேட்டினை உண்டாக்கும்.
-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.Seyarkariya Seyvaar Periyar Siriyar · Seyarkariya Seykalaa Thaar
தமிழ் உரை
பெரியோர் எனப்படுவார் செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்; செய்தற்கு அரியவற்றைச் செய்ய இயலாதவர் சிறியர். இது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொருந்துவதாகும்.
-
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin · Uyyaa Vizhuman Tharum
தமிழ் உரை
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
-
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka · Thoongaadhu Seyyum Vinai
தமிழ் உரை
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
-
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.Etrendru Iranguva Seyyarka Seyvaanel · Matranna Seyyaamai Nandru
தமிழ் உரை
பின்னால் தானே வருந்துதற்குரிய செயல்களை ஒருவன் ஒருகாலும் செய்தல் கூடாது; மயக்கம் காரணமாக அவற்றை ஒருமுறை செய்வானாயின் பின்னர் அத்தகையவற்றைச் செய்யா திருத்தல் நன்று.
-
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல்.Seyvinai Seyvaan Seyanmurai Avvinai · Ullarivaan Ullam Kolal
தமிழ் உரை
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa · Seyyaamai Maasatraar Kol
தமிழ் உரை
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
-
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை.Sirappariya Otrinkan Seyyarka Seyyin · Purappatuththaan Aakum Marai
தமிழ் உரை
மறைத்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை அரசன் பிறர் அறியாமல் செய்தல் வேண்டும். பிறர் அறியச் செய்வானானால் மறைக்கப்படவேண்டியதைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
-
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.Innaasey Thaarai Oruththal Avarnaana · Nannayanj Cheydhu Vital
தமிழ் உரை
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
-
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.Karuviyum Kaalamum Seykaiyum Seyyum · Aruvinaiyum Maantadhu Amaichchu
தமிழ் உரை
ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது …”
விடை
C · அன்றே மறப்பது நன்று. · குறள் 108
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை …”
விடை
C · செய்ந்நன்றி கொன்ற மகற்கு. · குறள் 110
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் …”
விடை
C · நன்மை கடலின் பெரிது. · குறள் 103
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





