கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
இப்போதே விண்ணப்பிக்க
பின்செல்
திருக்குறள்

திருக்குறள் கற்றல் துணைவன்

நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 79. நட்பு

பிற அதிகாரங்களிலும்: 82. தீ நட்பு · 83. கூடா நட்பு

உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
  1. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.
    Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpu
    தமிழ் உரை

    ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.

  2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.
    Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpu
    தமிழ் உரை

    அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.

  3. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.
    Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu
    தமிழ் உரை

    இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.

  4. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
    Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpu
    தமிழ் உரை

    அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.

  5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.
    Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharum
    தமிழ் உரை

    ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.

  6. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.
    Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpu
    தமிழ் உரை

    கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.

  7. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.
    Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpu
    தமிழ் உரை

    நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.

  8. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.
    Seeritam Kaanin Eridharkup Pattatai · Neraa Nirandhavar Natpu
    தமிழ் உரை

    கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறும்வரையிலும் கூடியிருப்பார் நட்பு, அதுபெற்றால் எறிதற்குத் துணையாகிய பட்டடையாகும்.

  9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilai
    தமிழ் உரை

    நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.

  10. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.
    Kanavinum Innaadhu Manno Vinaiveru · Solveru Pattaar Thotarpu
    தமிழ் உரை

    செயலும் சொல்லும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது வேறுவேறாய் இருப்பவரது நட்பு, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.

  11. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.
    Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttu
    தமிழ் உரை

    ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.

  12. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.
    Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappu
    தமிழ் உரை

    நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?

  13. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு.
    Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei · Mandril Pazhippaar Thotarpu
    தமிழ் உரை

    தனியே மனையில் இருக்கும்போது நட்புப்பாராட்டிப் பலரோடு அவையில் இருக்கும்போது பழிகூறுவார் நட்பு, சிறிதளவும் தம்மை நெருங்காது பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும்.

  14. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.
    Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhu
    தமிழ் உரை

    அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.

  15. உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?
    Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?
    தமிழ் உரை

    தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?

  16. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.
    Pedhai Perungezheei Natpin Arivutaiyaar · Edhinmai Koti Urum
    தமிழ் உரை

    அறிவற்றவனது நெருங்கிய நட்பைக்காட்டிலும் அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நல்லதாம்.

  17. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.
    Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vital
    தமிழ் உரை

    தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.

  18. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.
    Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandru
    தமிழ் உரை

    துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.

  19. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.
    Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patum
    தமிழ் உரை

    தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.

  20. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.
    Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urum
    தமிழ் உரை

    பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.

உங்களைச் சோதித்துப் பார்க்க

ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.

  1. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து …”

    1. அகநக நட்பது நட்பு.
    2. புனையினும் புல்லென்னும் நட்பு.
    3. ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    4. பின்னீர பேதையார் நட்பு.
    விடை

    A · அகநக நட்பது நட்பு. · குறள் 786

  2. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் …”

    1. பின்னீர பேதையார் நட்பு.
    2. நட்பாங் கிழமை தரும்.
    3. அகநக நட்பது நட்பு.
    4. பண்புடை யாளர் தொடர்பு.
    விடை

    A · பின்னீர பேதையார் நட்பு. · குறள் 782

  3. இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.

    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் …”

    1. அல்லல் உழப்பதாம் நட்பு.
    2. நட்பாங் கிழமை தரும்.
    3. இடுக்கண் களைவதாம் நட்பு.
    4. ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    விடை

    B · நட்பாங் கிழமை தரும். · குறள் 785

பயிற்சித் தேர்வு →

ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக

உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி