திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 16. பொறையுடைமை
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai · Potri Yozhukap Patum
தமிழ் உரை
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham · Thakudhiyaan Vendru Vital
தமிழ் உரை
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
-
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.Unnaadhu Norpaar Periyar Pirarsollum · Innaachchol Norpaarin Pin
தமிழ் உரை
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.
-
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.Poruththal Irappinai Endrum Adhanai · Maraththal Adhaninum Nandru
தமிழ் உரை
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
-
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul · Vanmai Matavaarp Porai
தமிழ் உரை
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai · Innaachchol Norkir Pavar
தமிழ் உரை
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
-
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.Akazhvaaraith Thaangum Nilampolath Thammai · Ikazhvaarp Poruththal Thalai
தமிழ் உரை
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
-
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup · Pondrun Thunaiyum Pukazh
தமிழ் உரை
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
-
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar · Poruththaaraip Ponpor Podhindhu
தமிழ் உரை
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று.Thiranalla Tharpirar Seyyinum Nonondhu · Aranalla Seyyaamai Nandru
தமிழ் உரை
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
-
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku · Iraiyorungu Nervadhu Naatu
தமிழ் உரை
பிற நாடுகள் பொறுத்த சுமையெல்லாம் தன்னிடம் வரும்போது அவற்றைத் தாங்கித் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடன்பட்டுக் கொடுப்பதே நாடாகும்.
-
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.Amarakaththu Vankannar Polath Thamarakaththum · Aatruvaar Metre Porai
தமிழ் உரை
போர்க்களம் சென்றார் பலராயினும் கடும்போர் நிகழ்த்தல் மாவீரரையே சார்வதுபோல, ஒரு குடியில் பிறந்தார் பலராயினும் அதன் சுமையைத் தாங்குதல் வல்லவரையே சாரும்.
-
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.Arannokki Aatrungol Vaiyam Purannokkip · Punsol Uraippaan Porai
தமிழ் உரை
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
-
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar · Unmai Nilakkup Porai
தமிழ் உரை
உலகநடையானது கண்ணோட்டத்தில் நிகழ்வது. கண்ணோட்டம் இல்லாதார் இருப்பது இந்நிலத்திற்குச் சுமையாதற்கே; வேறு எதற்கும் அன்று.
-
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.Eettam Ivari Isaiventaa Aatavar · Thotram Nilakkup Porai
தமிழ் உரை
அளவற்ற பொருளைச் சேர்த்தலையே விரும்பி, அதன் பயனான புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும் தன்மையதாம்.
-
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval · Thavvaiyaik Kaatti Vitum
தமிழ் உரை
பிறர் பேறு கண்டு பொறாமை கொள்வானைத் திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளுக்குக் காட்டி அவனிடமிருந்து நீங்கிவிடும்.
-
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan · Thaangaadhu Manno Porai
தமிழ் உரை
சான்றோர் தம் இயல்பில் குறையுடையவரானால், இப்பெரிய நிலமானது அதன் சுமையைத் தாங்கமுடியாததாகும்.
-
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan · Ketum Ninaikkap Patum
தமிழ் உரை
அழுக்காறு எனும் கோட்டம் பொருந்திய மனத்தை உடையவனது செல்வமும், செம்மை உடையவனது வறுமையும் ஆராயப்படும். ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பொறாமையும் செம்மையும் காரணங்களாக இருக்க முடியாதென்பதால் அறிவுடையார் இவற்றிற்குக் காரணம் யாதென்று ஆராய்தல் வேண்டும். முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்பது சமயங்களின் முடிவாகும்.
-
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum · Unpadhooum Indrik Ketum
தமிழ் உரை
ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவனது உறவினர் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுவர்.
-
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar · Perukkaththil Theerndhaarum Il
தமிழ் உரை
அழுக்காற்றைச் செய்து பெரியவர் ஆயினவர் யாரும் இல்லை; அழுக்காற்றைச் செய்யாது ஆக்கத்தினின்று நீங்கியவரும் இல்லை.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை …”
விடை
D · போற்றி யொழுகப் படும். · குறள் 154
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் …”
விடை
C · தகுதியான் வென்று விடல். · குறள் 158
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் …”
விடை
C · இன்னாச்சொல் நோற்பாரின் பின். · குறள் 160
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





