திருக்குறள் கற்றல் துணைவன்
நட்பு, சினம், கல்வி, உழைப்பு, வாய்மை என எந்தத் தலைப்பைப் பற்றியும் உங்கள் மொழியிலேயே கற்றல் துணைவனிடம் கேட்கலாம்; அதைப் பற்றிப் பேசும் குறள்கள் அவற்றின் மொழிபெயர்ப்பு, தமிழ் உரை, தமிழ் ஒலி வடிவம் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
திருக்குறள் இதைப் பற்றிப் பேசும் அதிகாரம் 31. வெகுளாமை
உங்கள் வினாவுக்கு மிக நெருக்கமான குறள்கள்
-
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்?Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk · Kaakkinen Kaavaakkaal En?
தமிழ் உரை
தன் சினம் பலிக்குமிடத்தில் அதனை எழாமல் காப்பவனே அருளால் காப்பவன் ஆவான். அவ்வாறின்றி, அது பலியாத இடத்து அதனைத் தடுத்தாலென்ன; தடுக்காவிட்டாலென்ன?
-
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.Maraththal Vekuliyai Yaarmaattum Theeya · Piraththal Adhanaan Varum
தமிழ் உரை
சினத்தால் ஒருவனுக்குத் தீயனவெல்லாம் வருமாதலால், யாரிடமும் சினம்கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.Ulliya Thellaam Utaneydhum Ullaththaal · Ullaan Vekuli Enin
தமிழ் உரை
ஒருவன் தன் மனத்தால் சினத்தை நினையாதவனானால் அவன் விரும்பிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கே அடைவான்.
-
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith · Thurandhaar Thurandhaar Thunai
தமிழ் உரை
அளவு கடந்த சினம்கொள்வார் உயிருடையவரானாலும் செத்தவரை ஒப்பர்; சினத்தை அறவேவிட்டவர் இறக்கும் தன்மைகொண்டவராயினும் அதனைக் கடந்தவரை ஒப்பர்.
-
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin · Pakaiyum Ulavo Pira
தமிழ் உரை
ஒருவனது முகத்தில் நகையையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்று எழும் சினத்தைக் காட்டிலும் வேறு பகைகள் உள்ளனவா? இல்லை.
-
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal · Thannaiye Kollunj Chinam
தமிழ் உரை
தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
-
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.Inareri Thoivanna Innaa Seyinum · Punarin Vekulaamai Nandru
தமிழ் உரை
பல சுடர்களைக்கொண்ட பெருநெருப்பு நெருங்கியதைப் போன்ற தீமைகளை ஒருவன் செய்வானாயினும் அவனிடம் சினம்கொள்ளாமை ஒருவனுக்கு இயலுமாயின் அது நன்று.
-
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum · Iladhanin Theeya Pira
தமிழ் உரை
ஒருவன் சினம் தன்னைவிட ஆற்றலுடையவன்மீது எழுமானால், அது அவனுக்கே தீதாக முடியும்; ஒருவன் சினம் தன்னினும் எளியார்மேல் எழுந்தாலும் அதனினும் தீயவை பிற இல்லை.
-
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.Sinaththaip Porulendru Kontavan Ketu · Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
தமிழ் உரை
சினத்தைத் தனது ஆற்றலை உணர்த்தும் குணமென்று கருதி, தன்னிடம் கொண்டவன் அடையும் கேடு, நிலத்தை அறைந்தவனின் கை துன்பத்தினின்றும் தப்பாததுபோல, உறுதியாக அவனை அடையும்.
-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.Sinamennum Serndhaaraik Kolli Inamennum · Emap Punaiyaich Chutum
தமிழ் உரை
சினமென்னும் நெருப்பு, தன்னைச் சேர்ந்தவரை அல்லாமல் அவருக்கு இனமான ஏமத்தைக்கூறும் புணையரையும் சுட்டெரிக்கும்.
-
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi · Arampaarkkum Aatrin Nuzhaindhu
தமிழ் உரை
உள்ளத்தில் சினம் தோன்றாமல் காத்துக் கல்வி அறிவு உடையவனாய் அடங்குதலைச் செய்யும் வல்லமை பெற்றவனை அறமானது அவனை அடையும் வழியில் சென்று பார்க்கும்.
-
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.Pollena Aange Puramveraar Kaalampaarththu · Ulverppar Olli Yavar
தமிழ் உரை
அறிவுடையார், அவருடைய பகைவர் கட்டின்றிச் செயல்பட்டார்களாயினும் அவர்கள் அறிய வெளிப்பட வெகுளமாட்டார். தாம் அவரை வெல்லுதற்குரிய காலம் வரும்வரையிலும் உள்ளத்துள்ளேயே தம் சினத்தை அடக்கிக்கொண்டு இருப்பர்.
-
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal · Yaarinum Yaarinum Endru
தமிழ் உரை
பிறர் யாவரையும்விட நாமிருவரும் மிக்க காதல் உடையோம் என்று சொன்னேன்; ‘பிறபெண்களைவிட உன்னிடம் நான்கொண்ட காதல் பெரி’ தென்று சொன்னதாகக் கருதி, ‘எப்பெண்ணையும்விட என்னிடம் காதல்கொண்டீர்’ என்று சொல்லிப் புலந்தாள்.
-
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.Immaip Pirappil Piriyalam Endrenaak · Kannirai Neerkon Tanal
தமிழ் உரை
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று சொன்னேன். “மறுபிறப்பில் பிரிவேன்” என்று சொல்லியதாகக் கருதி, அவள் கண்கள் நீரால் நிறைந்தன.
-
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.Ullinen Endrenmar Renmarandheer Endrennaip · Pullaal Pulaththak Kanal
தமிழ் உரை
‘நான் உன்னை நினைத்தேன்’ என்று சொன்னேன்; ‘என்னை ஏன்? இடையே மறந்தீர்’ என்று சொல்லித் தழுவாது புலந்தாள்.
-
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai · Neetuvaazh Kenpaak Karindhu
தமிழ் உரை
நான் அவரோடு ஊடி உரையாடாதிருந்தேன்; ஊடல் நீங்கி அவரை நீடுவாழ்கவென்று உரையாடுவேன் என்றெண்ணி அவர் தும்மினார்.
-
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.Thummuch Cheruppa Azhudhaal Numarullal · Emmai Maraiththiro Endru
தமிழ் உரை
எனக்குத் தும்மல் உண்டானபோது அதனை அடக்கவும் ‘உமக்கு வேண்டியவர் உம்மை நினைத்தலை என்னிடமிருந்து மறைப்பதற்காகத் தும்மலை அடக்கினீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.Vazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal · Yaarullith Thummineer Endru
தமிழ் உரை
நான் தும்மியபொழுது வாழ்த்தினாள்; உடனே அவ்வாறு வாழ்த்தியதை விடுத்து எப்பெண் நினைத்ததால் தும்மினீரென்று சொல்லி அழுதாள்.
-
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.Kottup Pooch Chootinum Kaayum · Oruththiyaik Kaattiya Sootineer Endru
தமிழ் உரை
நான் கிளைகளில் மலர்ந்த பூவை வளையமாகச் சூடினேனானாலும் உம்மால் காதலிக்கப் பட்டவள் ஒருத்திக்கு இப்பூவணியைக் காட்டுதற்காகச் சூடினீர் என்று சினம்கொள்வாள்.
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.Penniyalaar Ellaarum Kannin Podhuunpar · Nannen Paraththanin Maarpu
தமிழ் உரை
பரத்தமை உடையவனே, உன்னைப் பெண்ணியல்பினை உடைய யாவரும் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால், நான் உன் மார்பினைத் தழுவமாட்டேன்.
உங்களைச் சோதித்துப் பார்க்க
ஒவ்வொரு குறளின் இரண்டாம் அடியையும் தேர்ந்தெடுத்து, பின்னர் விடையைத் திறந்து பார்க்க.
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய …”
விடை
D · பிறத்தல் அதனான் வரும். · குறள் 303
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் …”
விடை
B · துறந்தார் துறந்தார் துணை. · குறள் 310
-
இக்குறளின் சரியான இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக்க.
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் …”
விடை
B · காக்கின்என் காவாக்கால் என்? · குறள் 301
ஒரு தலைப்பிலிருந்து தொடங்குக
உங்கள் சொற்கள், இந்த இணையதளத்தின் சொந்தத் திருக்குறள் மொழிபெயர்ப்புகளோடும் உரைகளோடும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. கற்றல் துணைவன் தானாக எதையும் எழுதுவதில்லை; உங்கள் வினா இந்த இணையதளத்திலேயே இருக்கும். இதை 23 மொழிகளிலும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0





