கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
மொழிபெயர்ப்புகள்

22 மொழிகளில் திருக்குறள்

எட்டாம் அட்டவணை மொழிகளில் CICT-இன் மொழிபெயர்ப்புகளுடன் 1,330 குறள்கள். அதிகாரத்தையும் மொழியையும் தேர்ந்தெடுக்க.

திருக்குறள் கற்றல் துணைவனிடம் கேட்க →

← முந்தையஅடுத்து →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

21. தீவினையச்சம் · Dread of Evil Deeds

தமிழ்க் குறளை வாசிப்பது கணினிக் குரல்.
201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
தீவினையென்று சொல்லப்படும் இறுமாப்பை, முன் தீச்செயல்களைச் செய்தவர் அஞ்சமாட்டார்; தீச்செயல்களைச் செய்யாத சீரியார் அதனைக் கண்டு அஞ்சுவர்.
202
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
தனக்கு இன்பம் தருதலைக் கருதிச் செய்யும் தீவினைகள் பின்னர்த் துன்பமே தருதலால், ஒருவனால் அவை தீயினும் அஞ்சப்படும்.
203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
பகைவர்க்கும் தீயவை செய்யாது விடுதல், தமக்கு உறுதிகள் செய்யும் அறிவுகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த அறிவென்று நல்லோர் சொல்வர்.
204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயலை ஒருவன் மறந்தும் எண்ணுதல் கூடாது; அவ்வாறு எண்ணுவானானால் அவனுக்குக் கேடு பயக்கும் செயலை அறம் எண்ணும்.
205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.
நான் வறியவனென்று எண்ணி வறுமையைப் போக்கிக்கொள்வதற்காக, ஒருவன் பிறர்க்குத் தீவினைகளைச் செய்தல் கூடாது; அவ்வாறு செய்வானாயின் அவன் மேலும் வறியவன் ஆவான்.
206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
தீவினைகள் தன்னைப் பின்வந்து வருத்துதலை விரும்பாதவன் தீயவற்றைத் தான் பிறர்க்குச் செய்தல் கூடாது.
207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.
எவ்வளவு பெரிய பகைவர்களை உடையவரும் அவர்களிடமிருந்து தப்புதல் இயலும்; ஆனால், தீவினையாகிய பகை நீங்காது ஒருவன் பின்சென்று கொல்லும்.
208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடியுறைந் தற்று.
பிறர்க்குத் தீமை செய்தார் தாம் கெடுவர். ஒருவனது நிழல் அவனை விடாது வந்து அவனடியில் தங்குவதுபோல் தீவினை செய்தவனைக் கேடு விடாது தொடர்ந்து தாக்கும்.
209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.
ஒருவன் தன்னைத் தான் விரும்புவானானால் தீவினையாகிய பகுதி எவ்வளவு சிறியதாயினும் அதனை அவன் செய்யாதிருத்தல் வேண்டும்.
210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.
ஒருவன் நன்னெறியில் செல்லாது கொடுநெறியில் சென்று மற்றவர்க்குத் தீமை செய்யானானால், அவனுக்குக் கேடு நேராது என்பதை அறிக.

அதிகாரங்கள்

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0 · திருக்குறள் பன்மொழிச் செயலியாகவும் கிடைக்கிறது

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி