Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue
26. புலால் மறுத்தல் · Abstinence from Flesh
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
எங்ஙனம் ஆளும் அருள்?
தன் உடலைப் பெருக்குதலுக்காகத் தான் மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன் எவ்வகையால் அருளினை ஆளுதல் கூடும்?
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளால் பயன் அடைதல் அதனைக் காப்பாற்றாதார்க்கு இல்லை; அதுபோல, அருளால் பயன் அடைதல் ஊன் தின்பார்க்கு இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
உடல்சுவை உண்டார் மனம்.
கொலைக்கருவியைக் கையில்கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவது அல்லாமல் அருளை நோக்காது; அதுபோல, வேறோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவதல்லாமல் அருளை நோக்காது.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
பொருளல்லது அவ்வூன் தினல்.
அருள் என்பது யாதென்றால் கொல்லாமை; அருள் அல்லது யாதெனில் கொல்லுதல்; ஆதலால், ஊன் தின்னல் அறமற்ற செயலாகும்.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
அண்ணாத்தல் செய்யாது அளறு.
சில உயிர்கள் உடம்பில் நிற்றல், ஊன் உண்ணாமையென்னும் அறத்தின்பாற்பட்டது; ஆதலால், அந்நிலை குலைய, ஒருவன் ஊனை உண்ணுவானானால், அவனை விழுங்கிய நிரயம் உமிழ்தற்கு வாயைத் திறவாது. ஊன் உண்பவன் அவ்வறமற்ற செயலால் நிரயத்துள் அழுந்துவான்.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
ஊன் தின்னல் காரணமாக உலகம் உயிர்களைக் கொல்லாதிருந்தால், பொருள் காரணமாக ஊன் விற்பார் யாரும் இருக்கமாட்டார்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலால் என்பது பிறிதோர் உயிரின் புண்; அது தூய்மையற்றது என்பதை உணர்வார் அதனை உண்ணாதிருத்தல் வேண்டும்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவினை உடையவர் உயிரிலிருந்து நீங்கிய ஊனை உண்ணமாட்டார். ஊன் என்பது உண்மையில் பிணமென்பதை உணர்ந்தவர் அதனை உண்ண விரும்பார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாதிருத்தல் நன்று.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.
ஊன் தின்பாரானாலும் உயிர்களுக்கு ஒரு தீமையும் நினையாதவர் அருள் உடையவரே என்ற கருத்தை மறுத்து, ஊன் தின்பார் உயிர்களைக் கொல்லாராயினும் அருள் அற்றவரே என்னும் முடிவு.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



