शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
आतांच अर्ज करात
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

← आदलेंफुडलें →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

6. வாழ்க்கைத் துணைநலம் · The Worth of a Wife

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்கு ஏற்ற நற்பண்பு, நற்செய்கைகள் உடையவளாகித் தன்னைக் கொண்ட கணவனின் வருவாய்க்குத்தக்க வாழ்வை நடத்துபவள் நல்ல வாழ்க்கைத் துணையாவாள்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
இல்லறத்திற்கேற்ற நற்பண்புகள், நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லையாயின், அவ்வாழ்க்கை செல்வத்தால் எவ்வளவு மாட்சிமை பொருந்தியதாயினும், அதனால் பயனேதும் இல்லை.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
ஒருவனுடைய மனைவி மாண்புடையவளானால், அவனுக்கும் அவனது இல்லறத்திற்கும் இல்லாதது யாது?அவள் அத்தகையவளாக இல்லையேல், அவனுக்கும் அவனது இல்லறத்திற்கும் உள்ளது யாது?
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
இல்லாள் கற்பென்னும் கலங்கா நிலைமை உடையவளானால், ஒருவன் அடையும் பொருள்களுள் அத்தகையவளினும் மேம்பட்ட பொருள்கள் எவையுள்ளன?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
தெய்வம் எதனையும் தொழாமல், கணவனைத் தொழுது துயிலெழுகின்ற மனைவி பெய்யென்று சொல்ல, மழை பெய்யும். கற்புடைய மனைவியின் விருப்பமறிந்து தெய்வமே அவளுக்கு ஏவல் செய்யும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
இல்லற நெறியினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துக்கொண்டு, தன்னைக் கொண்ட கணவனின் நலம் பேணி, இருவர்மாட்டும் சிறப்பான புகழ் நீங்காமல் காத்து, இல்லறத்தைச் சோர்வின்றி நடத்துபவளே பெண்ணாவாள்.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெண்களைக் கணவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர்கள் தம் நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்துதலே தலைசிறந்த காவலாகும்.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
மகளிர் தம்மைக்காத்துத் தம் கணவரையும் பேணுதல் பெறுவரானால் தேவர்கள் வாழும் உலகில் பெருஞ்சிறப்பினை அடைவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழை விரும்பி வேண்டும் மனைவி இல்லாதவர்களுக்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் அரிமாபோன்று நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India Ministry of Education
अंमलबजावणी Central Institute of Classical Tamil
सहकार्य Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti