মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

78. படைச் செருக்கு · Military Spirit

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
பகைவர்களே, என் தலைவனுடன் போர்செய்து, அவன் வேலால் வீழ்த்தப்பட்டு நடுகல்லான வீரர் பலராவர். எனவே, நீவிர் உயிரோடு இருக்க விரும்பினால் என் தலைவனுடன் போர் செய்யாதீர்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
காட்டில் ஓடும் முயலைக் குறிதவறாது எய்த அம்பை ஏந்துதலைக்காட்டிலும் போர்க்களத்தில் நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்துதல் நன்றாகும்.
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவரோடு போரிடும் வீரத்தை நூலோர் பேராண்மையென்று பாராட்டுவர். பகைவர்க்கு ஒரு தாழ்வு நேரும்போது அதனைத் தீர்த்தல்பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அப்பேராண்மைக்குக் கூர்மையென்று சொல்லுவார்கள்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
தன் கையிலிருந்த வேலைத் தன் எதிரில் வந்த களிற்றின்மேல் எறிந்து அதன் உயிரைப் போக்கிப் பின்னும் வருகின்ற களிற்றைத் தாக்க வேலைத் தேடித் திரிபவன், தன் மார்பில் தைத்திருக்கும் வேலைப் பறித்து மகிழ்ச்சியோடு நகைசெய்வான்.
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
பகைவரைச் சினந்து நோக்கிய கண் அவர் வேலைக்கொண்டு எறிய, அது தாங்காது அந்நோக்கை அழித்து இமைக்குமானால் அது வீரர்க்குப் புறங்கொடுத்தலை ஒக்கும்.
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
தான் வாழ்ந்த நாட்களையெல்லாம் எடுத்தெண்ணி, அவற்றுள் விழுப்புண்படாத நாட்களை யெல்லாம் பயன்படாது கழிந்த நாட்களாகக் கருதுவான் வீரன்.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
வையத்துச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர் கழல் கட்டுதல் அலங்காரத்தன்மை உடையது.
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
போர் வந்தால் அவ்வாய்ப்பை நழுவவிடாமல் உயிருக்கு அஞ்சாது போரில் கலந்துகொள்ளும் மாவீரர்கள் அது வேண்டாமென்று அரசன் தடுப்பினும் தம் வீரத்தில் சிறிதும் குறையாதவராவர்.
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
தாம் கூறிய வஞ்சினம் தப்பாகக்கூடாது என்பதால் போர்க்களம் சென்று இறக்கும் வீரரை வஞ்சினம் தப்பியவர் என்று சொல்லி யார் இகழ்ந்து பேசுவார்கள்?
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
தம்மைக் காத்த அரசர்களின் கண்களில் நீர் நிறையும் வகையில் போரில் இறப்பின், அம்மரணமானது பிச்சை கேட்டாயினும் பெறும் தகுதியை உடையது.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti