Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
Ask the Thirukkural study companion →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
80. நட்பாராய்தல் · Investigation in forming Friendships
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு.
ஒருவனை விரும்பி நண்பனாய் ஏற்றுக்கொண்டபின் அவனை விலக்குதல் உண்டாகாது; ஆதலால், முன்னர் ஆராயாது ஒருவனை நண்பனாகக் கொள்ளுதல்போலக் கேடுதருவது வேறொன்றும் இல்லை.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.
பண்பாலும் செயலாலும் நல்லவன் என்று பலகாலம் பலமுறைகளில் ஆராயாது ஒருவனோடு கொள்ளும் நட்பு முடிவில் தான் இறத்தற்கு ஏதுவாகிய துன்பத்தினைக் கொடுக்கும்.
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.
ஒருவனுடைய பண்பையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறைவற்ற உறவினரையும் ஆராய்ந்தறிந்து அவனை நண்பனாகக் கொள்ளல் வேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனை ஏதேனும் விலை கொடுத்தாயினும் நண்பனாக்கிக்கொள்ள வேண்டும்.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
உலக வழக்கு அல்லாததைச் செய்யக்கருதினால், துயரம் உண்டாகும் வகையில் சொல்லி அதனை விலக்கியும், அதனைச் செய்யுமானால், மேலும் செய்யாதவாறு இடித்து நெருக்கியும், உலக வழக்கைச் செய்யாதபோது செய்விக்கவும் வல்லவரை ஆராய்ந்து நட்புக்கொள்ளல் வேண்டும்.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.
ஒருவனுக்குக் கேடு என்பது தன் நண்பர்களை முற்றுமாக அளக்கும் அளவுகோலாகும்; ஆதலால், கேட்டிலும் அவனால் அடையப்பெறும் நல்லறிவு ஒன்று உண்டு.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவற்றவரோடு கொண்ட நட்பை ஒழித்து, அவரிடமிருந்து நீங்குதலாம்.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
தம் ஊக்கம் குறைதற்குக் காரணமாகிய செயல்களைச் செய்ய எண்ணுதல் கூடாது; அதுபோலத் தமக்குத் துன்பம் வரும்போது கைவிடுவார் நட்பைக் கொள்ளுதல் தக்கதன்று.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.
ஒருவன் கேடு அடையும்போது அவனைவிட்டு நீங்குவார் அவனோடு கொண்டிருந்த நட்பு, தன்னைக் கூற்றுவன் அணுகுங்காலத்தில் ஒருவன் நினைத்தாலும் அது அவன் உள்ளத்தைச் சுட்டு வேதனைக்கு உள்ளாக்கும்.
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.
குற்றமற்றவரின் நட்பினையே கொள்ளல் வேண்டும்; உலகோடு ஒத்தலில்லார் நட்பை அறியாது கொண்டிருந்தால் அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாயினும் அவரிடமிருந்து நீங்குதல் வேண்டும்.
Chapters
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App





