Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 62. ஆள்வினை உடைமை · Manly Effort
Also in: 103. குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
The couplets closest to your question
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai PazhiMisfortune is disgrace to none
The shame is nothing learnt or done.Tamil commentary
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj CherukkuOn excellence of industry
Depends magnanimous bounty.Tamil commentary
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli TharumThough fate is against fulfilment
Hard labour has ready payment.Tamil commentary
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru UlakuIn doing work don't break and shirk
The world will quit who quits his work.Tamil commentary
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi TharumFeel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.Tamil commentary
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak KetumBounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.Tamil commentary
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi VitumIndustry adds prosperity
Indolence brings but poverty.Tamil commentary
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi NaalIlluck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.Tamil commentary
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum ThoonWork who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.Tamil commentary
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru PavarTireless Toiler's striving hand
Shall leave even the fate behind.Tamil commentary
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.Aalvinaiyum Aandra Arivum Enairantin · Neelvinaiyaal Neelum KutiThese two exalt a noble home
Ardent effort and ripe wisdom.Tamil commentary
முயற்சி, நிறைந்த அறிவு ஆகிய இரண்டையும் உடைய இடையறாத செயலால் ஒருவனது குடி உயரும்.
-
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith · Thaazhaadhu Ugnatru PavarkkuWho raise their races with ceaseless pain
No need for plan; their ends will gain.Tamil commentary
தம்குடியை உயர்த்த விரைந்து முயல்பவர்க்கு அதுபற்றி அவர் ஆராய வேண்டாமல் தானே முடிவுறும்.
-
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha · Illaanmai Aakkik KolalWho raise their race which gave them birth
Are deemed as men of manly worth.Tamil commentary
ஒருவனுக்கு உயர்ந்த ஆண்மையென்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியில் உள்ளவர்களை உயரச்செய்து தன்வழிப்படுத்திக்கொள்ளுதல் ஆகும்.
-
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.Mutivum Itaiyoorum Mutriyaangu Eydhum · Patupayanum Paarththuch CheyalWeigh well the end, hindrance, profit
And then pursue a fitting act.Tamil commentary
வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.
-
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.Karumam Seyaoruvan Kaidhooven Ennum · Perumaiyin Peetutaiyadhu IlNo greatness is grander like
Saying "I shall work without slack".Tamil commentary
தன் குடியை உயர்த்தற்குத் தொடங்கிய செயலை முடிக்காதுவிடேன் என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்குச் சிறப்பான பெருமை வேறு எதுவும் இல்லை.
-
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.Porulkaruvi Kaalam Vinaiyitanotu Aindhum · Iruldheera Ennich CheyalMoney and means, time, place and deed
Decide these five and then proceed.Tamil commentary
ஒரு செயலை மேற்கொள்ளும்போது பொருள், கருவி, வினை, காலம், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமின்றி, பிழையாமல் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
-
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu · Aindhutan Maantadhu AmaichchuWith these he guards people, - by his
Knowledge, firmness and manliness.Tamil commentary
வினை மேற்கொள்ளும்போது தளராமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், முயற்சியும் ஆகியவற்றோடு ஐந்து அங்கங்களும் திருந்த உடையவனே அமைச்சனாவான்.
-
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul · Pokoozhaal Thondrum MatiEfforts succeed by waxing star
Wealth-losing brings waning star.Tamil commentary
ஒருவனுக்குப் பொருள் சேர்தற்குக் காரணமாகிய ஊழால் முயற்சி உண்டாகும், சோம்பல் நீங்கும்; பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாகும்.
-
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.Pariyinum Aakaavaam Paalalla Uyththuch · Choriyinum Pokaa ThamaThings not thine never remain
Things destined are surely thine.Tamil commentary
தனக்கு ஊழல்லாத பொருள்களை ஒருவன் வருந்திக் காப்பாற்றினாலும் அவனிடத்து அப்பொருள்கள் நிலைத்து நிற்கமாட்டா. ஊழால் தனதாகிய பொருள்களை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை தன்னைவிட்டுப்போகா.
-
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap · Perththulla Ventaa PirappuOne-minded sage sees inner-truth
He is free from thoughts of rebirth.Tamil commentary
அறிஞரிடம் கேட்டறிந்தவற்றை ஒருவனது உள்ளம் தெளிவாக ஆராய்ந்து மெய்ப்பொருளை உணருமானால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உண்டென்று நினைத்தல் வேண்டா.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“In doing work don't break and shirk …”
Answer
A · The world will quit who quits his work. · Couplet 612
-
Choose the correct second line of this couplet.
“Misfortune is disgrace to none …”
Answer
B · The shame is nothing learnt or done. · Couplet 618
-
Choose the correct second line of this couplet.
“Though fate is against fulfilment …”
Answer
C · Hard labour has ready payment. · Couplet 619
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





