ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ · ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ · ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ
ਇੰਟਰਫ਼ੇਸ ਦਾ ਇਹ ਅਨੁਵਾਦ ਅਜੇ ਖਰੜਾ ਹੈ ਅਤੇ CICT ਵੱਲੋਂ ਇਸ ਦੀ ਸਮੀਖਿਆ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ। English
ਵਾਪਸ
ਅਨੁਵਾਦ

22 ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ ਤਿਰੁੱਕੁਰਲ

ਸਾਰੇ 1,330 ਕੁਰਲ, ਅੱਠਵੀਂ ਅਨੁਸੂਚੀ ਦੀਆਂ ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ CICT ਦੇ ਅਨੁਵਾਦਾਂ ਸਮੇਤ। ਅਧਿਆਇ ਅਤੇ ਭਾਸ਼ਾ ਚੁਣੋ।

ਤਿਰੁੱਕੁਰਲ ਅਧਿਐਨ ਸਾਥੀ ਨੂੰ ਪੁੱਛੋ →

← ਪਿਛਲਾਅਗਲਾ →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

65. சொல்வன்மை · Power of Speech

ਤਮਿਲ ਪਾਠ ਕੰਪਿਊਟਰ ਦੀ ਆਵਾਜ਼ ਵਿੱਚ ਪੜ੍ਹਿਆ ਜਾਂਦਾ ਹੈ।
641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று.
அமைச்சர்க்கு இன்றியமையாச் சிறப்பு, நாநலம் என்று பாராட்டப்பெறும் சொல்வன்மை உடையராதல்; அந்நலம் பிற நலன்கள் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி அவற்றிலும் உயர்ந்ததாம்.
642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
ஆக்கமும் அழிவும் சொல்லால் வருமாதலால் சொல்லில் சோர்வு நிகழாமல் போற்றிக் காத்தல் வேண்டும்.
643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.
கேட்டாரைக் கவரும் தன்மையதாய்க் கேளாதவரும் விரும்பும்வண்ணம் சொல்லப்படுவதே சொல்லாகும்.
644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல்.
சொல்லைத் தன்னுடையவும் கேட்பாருடையவும் திறங்களை அறிந்து சொல்ல வேண்டும்; அவ்வாறு சொல்லுதற்குமேலான அறமும் பொருளும் வேறில்லை.
645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்லவல்லதொரு சொல்லின்மை அறிந்து, பின் அச்சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.
646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்.
தாம் சொல்வதைப் பிறர்கேட்க விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனைக்கொள்ளுதல் அமைச்சியலில் குற்றமற்றவரது துணிவாகும்.
647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்லுதல் வல்லவனாய், சோர்விலனாய், அவைக்கு அஞ்சாதவனாய் இருப்பவனை வெற்றிகொள்ளுதல் யார்க்கும் அரியசெயலாகும்.
648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.
சொல்லப்படுவதை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லவல்லவரைப் பெற்றால், உலகம் அவர்சொல்லுவதை விரைந்து ஏற்றுக்கொள்ளும்.
649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.
குற்றமற்ற, சில சொற்களைச் சொல்லுதலை அறியாதவர் பல சொற்களைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர்.
650
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார்.
தாம் கற்ற நூலைப் பிறர் அறியும்வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம்வீசாத மலரை ஒத்தவராவர்.

ਅਧਿਆਇ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

ਅਨੁਵਾਦ © ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ, ਚੇਨਈ · CC BY 4.0 · ਤਿਰੁੱਕੁਰਲ ਬਹੁ-ਭਾਸ਼ਾਈ ਐਪ ਵਜੋਂ ਵੀ ਉਪਲਬਧ

ਪਹਿਲਕਦਮੀ Government of India ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ
ਲਾਗੂਕਰਤਾ ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ