Thirukkural study companion
Ask about any subject in your own language (friendship, anger, learning, hard work, truth) and the companion finds the couplets of the Thirukkural that speak of it, with their translation, the Tamil commentary and a reading in Tamil.
The Thirukkural speaks of this in the chapter 62. ஆள்வினை உடைமை · Manly Effort
The couplets closest to your question
-
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu · Aalvinai Inmai PazhiMisfortune is disgrace to none
The shame is nothing learnt or done.Tamil commentary
நன்மை செய்யும் விதியில்லாமை யார்க்கும் பழியாகாது; அறிய வேண்டியதை அறிந்து வினை மேற்கொள்ளாதிருத்தலே பழியாகும்.
-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.Arumai Utaiththendru Asaavaamai Ventum · Perumai Muyarsi TharumFeel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.Tamil commentary
நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
-
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai · Inmai Pukuththi VitumIndustry adds prosperity
Indolence brings but poverty.Tamil commentary
ஒருவனது முயற்சி அவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சியின்மை அவனை வறுமையில் தள்ளும்.
-
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre · Velaanmai Ennunj CherukkuOn excellence of industry
Depends magnanimous bounty.Tamil commentary
எல்லார்க்கும் உதவுதல் என்னும் மேம்பாடு, முயற்சியென்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைபெற்றது. வேளாண்மையென்பது முயற்சியுடையாரையன்றிப் பிறரிடம் இல்லை.
-
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai · Theerndhaarin Theerndhandru UlakuIn doing work don't break and shirk
The world will quit who quits his work.Tamil commentary
வினையாகிய இன்றியமையாப் பொருளைச் செய்யாது விட்டவரை உலகம் கைவிடும்; ஆதலால், ஒருவன் தன்னால் செய்யப்படும் வினையிலிருந்து நீங்கியிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
-
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.Matiyulaal Maamukati Enpa Matiyilaan · Thaalulaal Thaamaraiyi NaalIlluck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.Tamil commentary
கரிய மூதேவி ஒருவனது சோம்பலில் தங்குவாளென்றும், திருமகள் சோம்பலற்றவனது முயற்சியில் தங்குவாளென்றும் அறிந்தோர் கூறுவர்.
-
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir · Thunpam Thutaiththoondrum ThoonWork who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.Tamil commentary
தான் இன்பத்தை விரும்பாமல் வினையாற்றுதலையே விரும்புவானானால், தன் உறவினராகிய சுமையின் துன்பத்தை நீக்கி அதனைத் தாங்கிக்கொள்ளும் தூணாவான்.
-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith · Thaazhaadhu Ugnatru PavarTireless Toiler's striving hand
Shall leave even the fate behind.Tamil commentary
செய்யமுனையும் செயலைத் தளர்வின்றிக் குற்றமேதுமின்றி முயல்பவர், ஊழ் தடையா யிருப்பினும் அதனையும் புறம் காண்பர்.
-
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan · Meyvaruththak Kooli TharumThough fate is against fulfilment
Hard labour has ready payment.Tamil commentary
ஒருவன் முயலும் வினை தெய்வம் காரணமாகக் கருதிய பயனைத்தராமல்போனாலும் முயற்சியானது ஒருவனது உடல் வருத்திய வருத்தத்தின் கூலியளவு தரும்.
-
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai · Vaalaanmai Polak KetumBounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.Tamil commentary
முயற்சியற்றவன் பிறர்க்கு உதவிசெய்யும் தன்மை, படை கண்டால் அஞ்சும் பேடியின் கையிலுள்ள வாளைக் கையாளும் தன்மைபோலப் பயனற்றுக் கெடும்.
-
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.Ullam Utaimai Utaimai Porulutaimai · Nillaadhu Neengi VitumPsychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.Tamil commentary
ஒருவனுக்கு ஊக்கமுடைமையே நிலைத்த உடைமை ஆகும்; பொருளுடைமை நிலையற்று நீங்கிப்போகும்.
-
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.Ozhukkam Utaimai Kutimai Izhukkam · Izhindha Pirappaai VitumGood conduct shows good family
Low manners mark anomaly.Tamil commentary
யாவர்க்கும் ஒழுக்கம் உடைமை குலம் உடைமையாகும்; ஒழுக்கத்தில் தவறுவோன் இழிந்த பிறவியாவான்.
-
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar · Utaiyadhu Utaiyaro MatruTo own is to own energy
All others own but lethargy.Tamil commentary
ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; ஊக்கமில்லாதார் வேறு ஏதேனும் உடையவராவரோ? ஆகார்.
-
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.Aakkam Adharvinaaich Chellum Asaivilaa · Ookka Mutaiyaa NuzhaiFortune enquires, enters with boom
Where tireless strivers have their home.Tamil commentary
துன்பத்தில் தளராத ஊக்கம் உடையவனிடம் பொருள் தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
-
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.Aakkam Izhandhemendru Allaavaar Ookkam · Oruvandham Kaiththutai Yaarhe strong in will do not complain
The loss of worldly wealth and gain.Tamil commentary
நிலையான ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார், இழந்தாராயினும் ‘யாம் கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார்.
-
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai · Veruum Pulidhaak KurinHuge elephant sharp in tusk quails
When tiger, less in form, assails.Tamil commentary
பெரிய உடலும் கூரிய கோடும் கொண்டதாயினும் புலி எதிர்ப்படின் யானை அச்சம் கொள்ளும்.
-
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu · Valliyam Ennunj CherukkuHeartless persons cannot boast
"We are liberal to our best".Tamil commentary
ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகில் தாம் வள்ளல்தன்மை மிக்கவரென்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
-
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.Ulluva Thellaam Uyarvullal Matradhu · Thallinun Thallaamai NeerththuLet thoughts be always great and grand
Though they fail their virtues stand.Tamil commentary
அரசர் கருதுவதெல்லாம் தம் உயர்வையே கருதல் வேண்டும்; அவ்வுயர்வு அடையப்பட வில்லையாயினும் அடையப்பட்டதாகவே மதிக்கப்படும்.
-
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya · Vazhukkiyum Vaayaar SolalFoul words will never fall from lips
Of righteous men even by slips.Tamil commentary
மறந்தும் தீயசொற்களை வாயால் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாததாகும்.
-
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.Vellath Thanaiya Malarneettam Maandhardham · Ullath Thanaiyadhu UyarvuWater depth is lotus height
Mental strength is men's merit.Tamil commentary
நீர்ப்பூக்களின் தாளின் உயரம், நின்ற நீரின் அளவினதாகும்; அதுபோல மக்களின் உயர்வு, அவரது ஊக்கத்தின் அளவினதாகும்.
Test yourself
Choose the second line of each couplet, then open the answer.
-
Choose the correct second line of this couplet.
“In doing work don't break and shirk …”
Answer
B · The world will quit who quits his work. · Couplet 612
-
Choose the correct second line of this couplet.
“Misfortune is disgrace to none …”
Answer
B · The shame is nothing learnt or done. · Couplet 618
-
Choose the correct second line of this couplet.
“Industry adds prosperity …”
Answer
B · Indolence brings but poverty. · Couplet 616
Start from a subject
- 79. நட்பு · Friendship
- 31. வெகுளாமை · Restraining Anger
- 40. கல்வி · Learning
- 11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
- 62. ஆள்வினை உடைமை · Manly Effort
- 30. வாய்மை · Veracity
- 16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
- 9. விருந்தோம்பல் · Hospitality
- 104. உழவு · Farming
- 2. வான்சிறப்பு · The Blessing of Rain
The companion matches your words with the portal's own translations and commentaries of the Thirukkural. It writes no text of its own, and your question stays on the portal. It is free to use, in all 23 languages.
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0





