शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः · केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै
काशी तमिल सङ्गमम् 5.0
काशी तमिल सङ्गमम् 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै · शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः
अधुना आवेदनं करोतु
अस्य जालस्थानस्य अयम् अनुवादः प्रारूपमात्रम् अस्ति; CICT संस्थानं तस्य समीक्षां करोति। English
प्रतिगच्छतु
तिरुक्कुरळ्

तिरुक्कुरळ्-अध्ययन-सहचरः

स्वभाषायां कमपि विषयम् अधिकृत्य पृच्छतु (मैत्री, क्रोधः, विद्या, परिश्रमः, सत्यम्); तद्विषयकाणि तिरुक्कुरळ्-पद्यानि अध्ययन-सहचरः अन्विष्य ददाति, तेषाम् अनुवादेन, तमिल-व्याख्यया, तमिल-सस्वरपाठेन च सह।

तिरुक्कुरळ्-ग्रन्थः एतं विषयम् अस्मिन् अध्याये वदति 79. நட்பு · Friendship

एतेषु अध्यायेषु अपि: 82. தீ நட்பு · Evil Friendship · 83. கூடா நட்பு · Unreal Friendship

भवतः प्रश्नस्य निकटतमानि कुरळ्-पद्यानि

तमिल-पाठः सङ्गणक-स्वरेण पठ्यते।
  1. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.
    Mukanaka Natpadhu Natpandru Nenjaththu · Akanaka Natpadhu Natpu
    यथा मुखं प्रफुल्लं भवेत् तथा अनुबन्धनम्, न मित्रत्वम् ।
    यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् ।
    Friendship is not more smile on face
    It is the smiling heart's embrace.
    तमिल-व्याख्या

    ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.

  2. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.
    Inaiyar Ivaremakku Innamyaam Endru · Punaiyinum Pullennum Natpu
    ‘अयं मे एतादृशः, अहं तस्मै एतादृशः‘ इति प्रशंसापूर्वकम् उक्तमपि, तादृशी मैत्री, तृणकमिव, निरर्थिका।
    "Such we are and such they are"
    Ev'n this boast will friendship mar.
    तमिल-व्याख्या

    இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.

  3. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு.
    Nakudhar Poruttandru Nattal Mikudhikkan · Mersendru Itiththar Poruttu
    अनुबन्धः4, न केवलम् आमोदाय ।
    व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि ।
    Not to laugh is friendship made
    But to hit when faults exceed.
    तमिल-व्याख्या

    ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.

  4. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.
    Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai · Eydhalin Eydhaamai Nandru
    क्षेमप्रदं 7 कृतमपि,8 अननुवर्तमानानाम् अल्पानां दुष्टसौहार्दस्य प्राप्तेः, तस्य अप्राप्तिः वरम् ।
    Friends low and mean that give no help-
    Leave them is better than to keep.
    तमिल-व्याख्या

    துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.

  5. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
    Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri · Ollumvaai Oondrum Nilai
    ‘मित्रतायाः सिंहासनं किम्’ इति चेत्, यथासम्भवम्, निर्विकारं च मित्रतायाः स्थिरीकरणम्।
    Friendship is enthroned on the strength
    That always helps with utmost warmth.
    तमिल-व्याख्या

    நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.

  6. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.
    Navildhorum Noolnayam Polum Payildhorum · Panputai Yaalar Thotarpu
    यथा ग्रन्थः, अधीतमधीतम् 1 अधिकाधिकं सुखं प्रयच्छति2, तथा सदाचारिभिःसह सम्बन्धः, यदा यदा अनुष्ठीयते तदा तदा3 अधिकाधिकं सुखं प्रयच्छति ।
    Like taste in books good friendship grows
    The more one moves the more he knows.
    तमिल-व्याख्या

    நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.

  7. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.
    Seyarkariya Yaavula Natpin Adhupol · Vinaikkariya Yaavula Kaappu
    मैत्रीकरणसमानि दुर्लभानि कार्याणि कानि सन्ति? शत्रूणां दुष्कर्मभ्यः रक्षकाणि, तदन्यानि कानि सन्ति?
    Like friendship what's so hard to gain?
    That guards one against acts villain?
    तमिल-व्याख्या

    நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?

  8. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.
    Niraineera Neeravar Kenmai Piraimadhip · Pinneera Pedhaiyaar Natpu
    बुद्धिमद्भिः सह मैत्री, पूर्णिमायाः पूर्वं चन्द्रस्य वृद्धिरिव।
    मूर्खैः सह मैत्री, पूर्णिमायाः अनन्तरं तस्य क्षयः इव ।
    Good friendship shines like waxing moon,
    The bad withers like waning moon.
    तमिल-व्याख्या

    அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.

  9. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்.
    Inampondru Inamallaar Kenmai Makalir · Manampola Veru Patum
    सजातीयलिंगिनां 1 विजातीयानां मैत्री, वारयोषितां 2 मनांसीव, परिवर्तनशीला भवेत् ।
    Who pretend kinship but are not
    Their friendship's fickle like woman's heart.
    तमिल-व्याख्या

    தமக்கு நெருக்கம் உடையார்போன்று ஒழுகி, உண்மையில் நெருக்கம் அற்றாரோடு கொள்ளும் நட்பு மகளிர் மனம்போல வேறுபடும்.

  10. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.
    Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan · Allal Uzhappadhaam Natpu
    विनाशकारिभ्यः8 वियोज्य, 9 सन्मार्गे नियोज्य, 10विनाशकाले 11दुःखेन परितपनम् मैत्री।
    From ruin friendship saves and shares
    The load of pain and right path shows.
    तमिल-व्याख्या

    கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.

  11. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.
    Parukuvaar Polinum Panpilaar Kenmai · Perukalir Kundral Inidhu
    प्रमत्ताः1 इव दृश्यमानाः अपि, शिष्टताहीनानां सौहार्दस्य वर्धनात्, तस्य ह्रासः एव मधुरः।
    Swallowing love of soulless men
    Had better wane than wax anon.
    तमिल-व्याख्या

    அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.

  12. உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?
    Urinnattu Arinoruum Oppilaar Kenmai · Perinum Izhappinum En?
    उपगते2 संयुक्ताः भूत्वा, 3 अपगते वियुज्यमानानां मित्रतायाः, प्राप्त्यापि किम्? अप्राप्त्यापि किम् ?
    Who fawn in wealth and fail in dearth
    Gain or lose; such friends have no worth.
    तमिल-व्याख्या

    தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?

  13. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.
    Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan · Natpaang Kizhamai Tharum
    मैत्रीकरणार्थम्, संगमो वा 6 संवदनं वा नापेक्षितम्।
    समानी भावना एव मित्रतायै अधिकुर्यात् 7 ।
    No close living nor clasping grip
    Friendship's feeling heart's fellowship.
    तमिल-व्याख्या

    ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.

  14. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.
    Pakainatpaam Kaalam Varungaal Mukanattu · Akanatpu Oreei Vital
    यदा शत्रोः अपि मित्रं भवितुं कालः समायाति, तदा मुखभंग्या आसक्तः इव व्यवहृत्य, आन्तर्ये तेन सह मैत्रीभावम् अनाश्रित्य, अन्ते तमपि 4 त्यजेत् ।
    When foes, in time, play friendship's part
    Feign love on face but not in heart.
    तमिल-व्याख्या

    தம் பகைவர் தமக்கு நண்பராய் நடந்துகொள்ளும் காலம் வந்தால், தாமும் அவரோடு முகத்தால் நட்புக்கொண்டு, அகத்தால் நட்பைவிட்டுப் பின் அதனையும் தவிர்த்தல் வேண்டும்.

  15. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
    Utukkai Izhandhavan Kaipola Aange · Itukkan Kalaivadhaam Natpu
    च्युतवस्त्रस्य हस्तः इव, तत्क्षणमेव स्वमित्रस्य विध्नपरिहरणमेव सन्मित्रत्वम् ।
    Friendship hastens help in mishaps
    Like hands picking up dress that slips.
    तमिल-व्याख्या

    அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.

  16. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.
    Ollum Karumam Utatru Pavarkenmai · Sollaataar Sora Vital
    साध्यमपि कार्यम् 11, नाशयतां मैत्रीम्, किमपि अनुक्त्वैव जर्जरीकुर्यात् ।
    Without a word those friends eschew
    Who spoil deeds which they can do.
    तमिल-व्याख्या

    தம்மால் முடியும் செயலைச் செய்யவிடாது வீண்பொழுது போக்குவாரிடம் கொண்ட நட்பை, அவர் அறியுமாறு சொல்லாமல் மெதுவாகக் காலந்தாழ்த்தி விடுதல் வேண்டும்.

  17. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.
    Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu · Kolvaarum Kalvarum Ner
    उपलप्स्यमानं फलं तोलयन्तः सुहृदः, यत् उपलभमानम्4, तदधिगच्छत्यः पणस्त्रियः, तस्कराश्च 5 समानाः ।
    Cunning friends who calculate
    Are like thieves and whores wicked.
    तमिल-व्याख्या

    நட்பின் அளவைப் பார்க்காமல் அதனால் ஆகும் பயனின் அளவையே பார்க்கும் நண்பரும், விலையைக்கொள்ளும் பொதுமகளிரும், பிறர்க்கு விளையும் துன்பத்தைக் கருதாது அவர் சோர்வைக் கருதும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்.

  18. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.
    Maruvuka Maasatraar Kenmaion Reeththum · Oruvuka Oppilaar Natpu
    निष्कलंकानां मैत्रीम्10 किमपि दत्वापि आश्रयत।
    सहृदयेतराणां मैत्रीम्, किमपि दत्वापि परित्यजत ।
    The blameless ones as friends embarace;
    Give something and give up the base.
    तमिल-व्याख्या

    குற்றமற்றவரின் நட்பினையே கொள்ளல் வேண்டும்; உலகோடு ஒத்தலில்லார் நட்பை அறியாது கொண்டிருந்தால் அவர் வேண்டிய ஒன்றைக் கொடுத்தாயினும் அவரிடமிருந்து நீங்குதல் வேண்டும்.

  19. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.
    Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal · Paththatuththa Koti Urum
    परिहसनीयैः10 सह समुत्पन्नात् सौहार्दात्, शत्रुभ्यः प्राप्तं दुःखम्, दशगुणितकोटिवारं वरम् ।
    Ten-fold crore you gain from foes
    Than from friends who are vain laughers.
    तमिल-व्याख्या

    பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.

  20. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.
    Seeritam Kaanin Eridharkup Pattatai · Neraa Nirandhavar Natpu
    अयुक्ताः अपि, संयुक्ताः इव आचरतां मै़त्री, उचिते स्थाने प्राप्ते विक्षेप्तुं योग्यः, शूर्मः इव ।
    The friendship by an enemy shown
    Is anvil in time, to strike you down.
    तमिल-व्याख्या

    கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறும்வரையிலும் கூடியிருப்பார் நட்பு, அதுபெற்றால் எறிதற்குத் துணையாகிய பட்டடையாகும்.

आत्मानं परीक्षताम्

प्रत्येकस्य कुरळ्-पद्यस्य द्वितीयां पङ्क्तिं चिनोतु, ततः उत्तरम् उद्घाट्य पश्यतु।

  1. अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.

    “अनुबन्धः4, न केवलम् आमोदाय । …”

    1. मूर्खैः सह मैत्री, पूर्णिमायाः अनन्तरं तस्य क्षयः इव ।
    2. व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि ।
    3. यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् ।
    4. समानी भावना एव मित्रतायै अधिकुर्यात् 7 ।
    उत्तरम्

    B · व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि । · कुरळ्-पद्यम् 784

  2. अस्य कुरळ्-पद्यस्य शुद्धां द्वितीयां पङ्क्तिं चिनोतु। Choose the correct second line of this couplet.

    “यथा मुखं प्रफुल्लं भवेत् तथा अनुबन्धनम्, न मित्रत्वम् । …”

    1. मूर्खैः सह मैत्री, पूर्णिमायाः अनन्तरं तस्य क्षयः इव ।
    2. व्यभिचरिते5 सति, स्वयम् उपसृत्य भत्र्सनायापि ।
    3. यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् ।
    4. समानी भावना एव मित्रतायै अधिकुर्यात् 7 ।
    उत्तरम्

    C · यथा हृदयान्तरंगः प्रफुल्लो भवेत् तथा अनुबन्धनम्, मित्रत्वम् । · कुरळ्-पद्यम् 786

अभ्यास-परीक्षा →

कञ्चित् विषयं चित्वा आरभताम्

अध्ययन-सहचरः भवतः शब्दान् पोर्टल्-स्थितैः स्वकीयैः तिरुक्कुरळ्-अनुवादैः व्याख्याभिः च सह मेलयति। सः स्वयं कमपि पाठं न लिखति, भवतः प्रश्नः च पोर्टल्-मध्ये एव तिष्ठति। अस्य उपयोगः निःशुल्कः, सर्वासु 23 भाषासु।

अनुवादाः © केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम्, चेन्नै · CC BY 4.0

उपक्रमः Government of India शिक्षामन्त्रालयः, भारतसर्वकारः
कार्यान्वयनम् केन्द्रीय-शास्त्रीय-तमिल-संस्थानम् (CICT), चेन्नै