மொழிபெயர்ப்புகள்
108 திருக்குறள்
திருக்குறளின் முதல் 108 அதிகாரங்களிலிருந்து அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் CICT தேர்ந்தெடுத்த குறள்கள்: அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டும் முழுமையாக, தமிழ் உரையுடன். பங்கேற்கும் கல்வி நிறுவனம் தன் இணையவழி மதிப்பீட்டை இந்த 108 குறள்களிலிருந்து மட்டுமே அமைத்துக்கொள்ளலாம்; இவற்றை உங்கள் மொழியிலும், தமிழ் உரையைத் தமிழிலும் படிக்க.
அறத்துப்பால் · Virtue
1. கடவுள் வாழ்த்து · The Praise of God
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
உரை: எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன; அதுபோன்று உலகம் முழுமுதற் கடவுளை முதலாக உடையது.
2. வான்சிறப்பு · The Blessing of Rain
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உரை: மழை இடையறாது பெய்ய, உலகம் நிலைபெற்றிருத்தலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று கருதற்குரியது.
3. நீத்தார் பெருமை · The Greatness of Ascetics
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.
உரை: எல்லாவுயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சொல்லப்படுபவர் துறவியராவர்.
4. அறன் வலியுறுத்தல் · Assertion of the Strength of Virtue
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
உரை: நாம் இப்போது இளையவராக இருத்தலால் முதுமைவந்து இறக்கும் தறுவாயில் அறத்தினைச் செய்துகொள்ளலாம் என்று எண்ணாது, நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்யும் அறம் உடலிலிருந்து உயிர் போகுங்காலத்தில் அழிவில்லாத துணையாகும்.
5. இல்வாழ்க்கை · Domestic Life
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.
உரை: இல்லறத்தை அதற்குரிய சிறப்போடு மேற்கொண்டு உலகில் வாழ்பவன், நிலவுலகில் உள்ளவனானாலும் விண்ணில் உறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்து உயர்வாக எண்ணப்படுவான்.
6. வாழ்க்கைத் துணைநலம் · The Worth of a Wife
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு.
உரை: மனையாளது மாட்சிமையானது ஒருவனுக்கு நன்மையென்று அறிந்தோர் சொல்லுவர்; நல்ல மக்களைப் பெறுதல் அவர்களுக்கு நல்ல அணிகலமாகும்.
7. மக்கட்பேறு · The Wealth of Children
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
உரை: தம் மக்களுடைய மழலைச் சொற்களைக் கேளாதவர்கள் குழலிசையினிது, யாழிசையினிது என்று சொல்லுவர்.
8. அன்புடைமை · The Possession of Love
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.
உரை: உள்ளத்தில் அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியனவாகக் கொள்வர்; அன்புடையவரோ அவருடைய பொருள்கள் யாவற்றோடும் தம் உடம்பினையும் பிறர்க்கு உரியனவாக ஆக்குவர்.
9. விருந்தோம்பல் · Hospitality
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.
உரை: அனிச்சப்பூவானது நுகர்ந்தபொழுது வாடும். விருந்தினர், உபசரிப்பார் முகம் வேறுபட்டு நோக்க வருந்துவர்.
10. இனியவை கூறல் · The Utterance of Pleasant Words
இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
உரை: இனிய சொற்கள் தன்னிடமிருக்க அவற்றைப் பேசாது, இனிமையற்ற சொற்களைப் பேசுதல், இனிய கனிகள் தன்னிடம் இருக்கும்போது அவற்றை உண்ணாமல், இனிமையற்ற காய்களை உண்ணுவது போலாகும்.
11. செய்ந்நன்றியறிதல் · Gratitude
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
உரை: தனக்குப் பிறர் உதவி செய்யாதபோதும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் உதவிக்கு, மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அவை அவ்வுதவிக்கு ஈடாகமாட்டா.
12. நடுவு நிலைமை · Impartiality
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.
உரை: பிறர் பொருளையும் தம்பொருள்போலக் கருதிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வார்க்கு நல்ல முறையாம்.
13. அடக்கம் உடைமை · The Possession of Self-restraint
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.
உரை: ஒருவனைத் தீயினால் சுட்டபுண் உடலில் இருப்பினும் உள்ளத்தில் அப்பொழுதே ஆறிவிடும்; ஆனால், கடுஞ்சொற்களால் நாவினால் சுட்ட வடு எப்போதும் ஆறாது.
14. ஒழுக்கம் உடைமை · The Possession of Decorum
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
உரை: ஒழுக்கம் யாவர்க்கும் சிறப்பினைத் தருதலால், அது உயிரினும் மேலாகப் பாதுகாக்கப்படும்.
15. பிறனில் விழையாமை · Not coveting another's Wife
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
உரை: பிறன் மனையாளை விரும்பி நோக்காத ஆண்தகைமை சான்றோர்க்கு அறம் மட்டுமன்றி நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.
16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.
உரை: பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
17. அழுக்காறாமை · Not Envying
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு.
உரை: ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை என்னும் குற்றமில்லாத இயல்பைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக்கொள்க.
18. வெஃகாமை · Not Coveting
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
உரை: செல்வம் சுருங்காமைக்குக் காரணம் எதுவென்று ஒருவன் ஆராய்வானேயானால், அது மற்றவன் வேண்டும் கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.
19. புறங்கூறாமை · Not Backbiting
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
உரை: பிறரைப் புறங்கூறுவார், அவர் குற்றத்தைப்போலத் தம் குற்றத்தையும் காண வல்லவரானால் அவர்களுடைய நிலையான உயிர்க்கு வரும் துன்பமும் உண்டோ?
20. பயனில சொல்லாமை · Against Vain Speaking
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.
உரை: சொற்களில் பயனுடைய சொற்களையே சொல்லவேண்டும். சொற்களில் பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது.
21. தீவினையச்சம் · Dread of Evil Deeds
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
உரை: தனக்கு இன்பம் தருதலைக் கருதிச் செய்யும் தீவினைகள் பின்னர்த் துன்பமே தருதலால், ஒருவனால் அவை தீயினும் அஞ்சப்படும்.
22. ஒப்புரவறிதல் · Duty to Society
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்னாற்றுங் கொல்லோ உலகு.
உரை: தமக்கு நீர் அளிக்கும் மழைக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஏதும் செய்வதில்லை. அம்மழைபோன்றார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு கருதுவன அல்ல.
23. ஈகை · Giving
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
உரை: வறியவரது கடும்பசியைத் தீர்த்தல் அறமாகும். பொருள் உடையான் ஒருவன் அதனைத் தனக்கு உதவவைக்கும் இடம் அவ்வறமேயாகும்.
24. புகழ் · Renown
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
உரை: வறியவர்க்கு ஈதலைச் செய்க; அதனால் பெறும் புகழுடன் வாழ்க; அப்புகழைத்தவிர மக்கள் உயிர்க்குப் பயன் வேறொன்றும் இல்லை.
25. அருளுடைமை · Compassion
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.
உரை: செல்வங்கள் யாவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வம் அருளாகிய செல்வமே; பொருளால் வரும் செல்வங்கள் யாவும் இழிந்தாரிடமும் இருப்பவை.
26. புலால் மறுத்தல் · Abstinence from Flesh
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.
உரை: எவ்வுயிரையும் கொல்லாமல், புலாலையும் உண்ணாமல் வாழ்பவனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
27. தவம் · Penance
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.
உரை: தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமாகிய அளவினதே தவத்தின் வடிவம்.
28. கூடா ஒழுக்கம் · Imposture
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
உரை: மனத்தை அடக்கியாளும் ஆற்றல் இல்லாதவன், ஆற்றலுடையாரின் வேடத்தைக் கொள்ளுதல், பசு புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு, தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போன்றது.
29. கள்ளாமை · The Absence of Fraud
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
உரை: உயர்ந்தோரால் இகழப்படுதலை வேண்டாதவன், பிறர் பொருள் எதுவாயினும் அதனை வஞ்சித்துக்கொள்ள எண்ணாத வகையில் தன் நெஞ்சத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
30. வாய்மை · Veracity
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.
உரை: வாய்மையென்று சொல்லப்படுவது எதுவென்றால், அது பிறவுயிர்களுக்குத் தீங்கு சிறிதும் செய்யாத சொற்களைச் சொல்லுதல்.
31. வெகுளாமை · Restraining Anger
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
உரை: தனக்குத் துன்பம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் சினம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அவ்வாறு காக்கவில்லையானால், அச்சினம் அவனையே கெடுக்கும் துன்பங்களைத் தரும்.
32. இன்னா செய்யாமை · Not doing Evil
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
உரை: தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
33. கொல்லாமை · Not killing
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
உரை: தான் உண்பதைப் பலவுயிர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவற்றைக் காத்தல், அறநூலார் தொகுத்துக் கொடுத்துள்ள அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறமாகும்.
34. நிலையாமை · Instability
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.
உரை: ஒருவன் நேற்று உயிருடன் இருந்தான்; இன்று உயிரற்றவன் ஆனான் என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்.
35. துறவு · Renunciation
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.
உரை: பற்றற்ற இறைவனைச் சேரும் நெறியே நன்னெறியென்று உள்ளத்துள் கொள்க; விடாது தொடரும் பற்றை விடுதற்கு அப்பற்றைப் பற்றிக்கொள்ளுதல் நன்று.
36. மெய்யுணர்தல் · Truth-Conciousness
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.
உரை: எந்தவொரு பொருளும் எத்தன்மையுடையதாகத் தோன்றினாலும் அப்பொருளிலிருந்து மெய்யான பொருளைக் காண்பதே அறிவின் செயலாகும்.
37. அவா அறுத்தல் · Curbing of Desire
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.
உரை: அவா என்பது எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் அழியாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் விதை என்று நூலோர் கூறுவர்.
38. ஊழ் · Fate
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.
உரை: ஊழினை விலக்குதற்கு ஒருவன் ஏதாவதொரு வழியைக் கருதினாலும் அவ்வழியாகவே வந்து முற்பட்டு நிற்கும் ஊழைக்காட்டினும் வலியுடையது ஏதும் இல்லை.
பொருட்பால் · Wealth
39. இறைமாட்சி · The Greatness of a King
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்.
உரை: முறை செய்து மக்கள் துன்புறாமல் காப்பாற்றும் மன்னன் பிறப்பால் மனிதனாயினும் செயலால் கடவுளென்று கருதப்படுவான்.
40. கல்வி · Learning
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.
உரை: கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
41. கல்லாமை · Ignorance
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.
உரை: மேலான நூல்களைக் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள ஏற்றத்தாழ்வு மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வை ஒத்ததாகும்.
42. கேள்வி · Hearing
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.
உரை: செவியால் வரும் செல்வமே ஒருவனுக்குச் சிறப்புடைய செல்வமாகும்; அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாயது.
43. அறிவுடைமை · The Possession of Knowledge
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
உரை: எப்பொருளை யார் சொல்லக்கேட்டாலும் அப்பொருளின் உண்மையான பயனைக் காணவல்லது அறிவாகும்.
44. குற்றங்கடிதல் · The Correction of Faults
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு?
உரை: தன்குற்றத்தைக் கண்டு அதனை நீக்கிப் பின்னர்ப் பிறர் குற்றம்காண வல்லவனானால் அரசனுக்கு ஆகும் குற்றம் ஏதுமில்லை.
45. பெரியாரைத் துணைக்கோடல் · Seeking the Aid of Great Men
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
உரை: இடித்துரைத்துக் கண்டிக்க வல்லாரைத் துணையாகப் பெறாமையால் பாதுகாவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.
46. சிற்றினம் சேராமை · Avoiding mean Associations
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு.
உரை: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது தனது தன்மை திரிந்து அது சேர்ந்த நிலத்தின் தன்மையதாகும்; அதுபோல, மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் தன்மையால், அறிவு தன் தன்மை இழந்து, அவ்வினத்தின் தன்மையதாகும்.
47. தெரிந்து செயல்வகை · Acting after due Consideration
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு.
உரை: செய்யத்தக்க செயலை முடிக்கும் வழியை எண்ணிப்பார்த்துத் தொடங்கல் வேண்டும்; பின்னர் எண்ணிப்பார்த்துக்கொள்ளலாம் என்று தொடங்குவது குற்றமாகும்.
48. வலியறிதல் · The Knowledge of Power
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.
உரை: தான் செய்ய எண்ணிய வினையின் வலியையும், தன் வலியையும், பகைவனின் வலியையும், இருவர்க்கும் துணையாவார் வலியையும் சீர்தூக்கிப்பார்த்துத் தன் வலி பகைவனின் வலியைவிடவும் மிகுமாயின், அவ்வினையை மேற்கொள்ளலாம்.
49. காலமறிதல் · Knowing the fitting Time
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.
உரை: ஒரு செயலைச் செய்யும் காலம் வரும்வரையிலும் ஒருவன் கொக்கினைப் போல் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வந்தவுடன் கொக்கு மீனைக் குத்துவதுபோலத் தன் செயலைத் தப்பாமல் முடித்தல் வேண்டும்.
50. இடனறிதல் · Knowing the Place
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.
உரை: முதலை ஆழமுடைய நீரில் இருக்கும்போது பிறவற்றையெல்லாம் வெல்லும்; அந்நீரிலிருந்து நீங்குமானால் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
51. தெரிந்து தெளிதல் · Selection and Confidence
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.
உரை: ஒருவனது குணங்களை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து, குணம்மிக்கவனாயின் பணிக்கு ஏற்றவனென்றும் குற்றம்மிக்கவனாயின் பணிக்குத் தகுதியுடையவன் அல்லனென்றும் முடிவுசெய்தல் வேண்டும்.
52. தெரிந்து வினையாடல் · Selection and Employment
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.
உரை: இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க வல்லவன் என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
53. சுற்றந் தழால் · Cherishing Kinsmen
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.
உரை: காக்கைகள் தமக்குரிய உணவைக் கண்டபோது மறையாது, தம் இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணும்; அத்தகைய இயல்பினை உடையவர்களுக்கே சுற்றத்தாரோடு அடையும் ஆக்கங்களும் உளவாகும்.
54. பொச்சாவாமை · Unforgetfulness
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும்.
உரை: தனக்கு வரவிருக்கும் துன்பங்களை முன்னமே அறிந்து தன்னைக் காத்துக்கொள்ளாது மறந்திருப்பான், பின்னர் அத்துன்பங்கள் வரும்போது தன் பிழையை எண்ணி வருந்த நேரிடும்.
55. செங்கோன்மை · The Right Sceptre
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி.
உரை: உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
56. கொடுங்கோன்மை · The Cruel Sceptre
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை
உரை: அரசனது தீச்செயலால் குடிகள் துன்பமுற்று, அதனைப் பொறுக்கமாட்டாமல் அழுத கண்ணீர் அவனது செல்வத்தைக் கடிதில் அழிக்கும் கருவியாகும்.
57. வெருவந்த செய்யாமை · Absence of Terrorism
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
உரை: ஒருவன் தன்னினும் மெலியாரைத் துன்புறுத்தும்போது, அதனை நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து மேலும் அவன் அதனைச் செய்யாது, அவனது குற்றத்திற்கேற்பத் தண்டிப்பவனே அரசனாவான்.
58. கண்ணோட்டம் · Benignity
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.
உரை: யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுவார், பிறர் தமக்கு நஞ்சிடுவதைக் கண்களால் கண்டும் அதனை உண்டு, பின்னும் அவரோடு இணைந்திருப்பர்.
59. ஒற்றாடல் · Detectives
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.
உரை: ஒற்றரும், புகழ்பெற்ற அறநூலுமாகிய இரண்டும் தன் இரண்டு கண்களெனத் தெளிதல் வேண்டும்.
60. ஊக்கம் உடைமை · Energy
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.
உரை: நீர்ப்பூக்களின் தாளின் உயரம், நின்ற நீரின் அளவினதாகும்; அதுபோல மக்களின் உயர்வு, அவரது ஊக்கத்தின் அளவினதாகும்.
61. மடி இன்மை · Unsluggishness
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.
உரை: விரைந்து செய்யவேண்டியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு, மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கேடடைவார் விரும்பும் மரக்கலங்கள்.
62. ஆள்வினை உடைமை · Manly Effort
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.
உரை: நாம் இச்செயலைச் செய்துமுடித்தல் அருமை உடையதென்று எண்ணி ஒருவன் மனம் தளர்தல் கூடாது; அதனை முடித்தலுக்கேற்ற பெருமையைத் தன் முயற்சி உண்டாக்கும்.
63. இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்.
உரை: ஒருவனது செயலால் தனக்கு இடுக்கண் வரும்போது அதற்கு அஞ்சாது உள்ளம் மகிழ்தல் வேண்டும்; அவ்விடுக்கணைத் தள்ளி மேலும் மேலும் ஒருவனுக்கு ஆற்றலைத் தரவல்லது அம்மகிழ்ச்சியைத்தவிர வேறில்லை.
64. அமைச்சு · The Office of Minister of state
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு.
உரை: ஒரு செயலை மேற்கொள்ளும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கேற்ற காலமும், அதைச் செய்யும் முறையும், அவ்வழியில் செய்யப்படும் அரிய வினையும் ஆகியவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணவல்லவனே அமைச்சனாவான்.
65. சொல்வன்மை · Power of Speech
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
உரை: தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்லவல்லதொரு சொல்லின்மை அறிந்து, பின் அச்சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.
66. வினைத் தூய்மை · Purity in Action
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை.
உரை: தன்னைப் பெற்றெடுத்த தாய் பசித்திருத்தலைக் காண்பான் ஆயினும் சான்றோர் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்தல் கூடாது.
67. வினைத்திட்பம் · Power in Action
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
உரை: எண்ணுபவர் வினைத்திட்பம் உடையவரானால், எண்ணிய பொருள்களையெல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர்.
68. வினை செயல்வகை · Modes of Action
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.
உரை: நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
69. தூது · The Envoy
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதாம் தூது.
உரை: தன்னுயிர்க்கு இறுதி செய்யுமாயினும் அஞ்சி எச்சொல்லையும் விடாது, தன் அரசனுக்கு உறுதிபயப்பதைச் சொல்லவல்லவன் தூதனாவான்.
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் · Conduct in the Presence of the King
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
உரை: எளிதில் பகையுணர்வுகொள்ளும் அரசரைச்சேர்ந்து அவரிடம் பணி செய்வார், அவரிடமிருந்து பெரிதும் விலகுவதும் அவரை மிகவும் நெருங்கியிருப்பதும் செய்யாது தீக்காய்வார்போல இடைநிலத்தில் நிற்றல் வேண்டும்.
71. குறிப்பறிதல் · The Knowledge of Indications
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.
உரை: தனக்கு முன்னிருக்கும் பொருளைத் தானே காட்டும் பளிங்குபோல் ஒருவனது நெஞ்சில் மிகுந்திருப்பதை அவன் முகம் தானே காட்டிவிடும்.
72. அவை அறிதல் · The Knowledge of the Council Chamber
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.
உரை: செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொற்களையும் அறிந்த தூய்மையினை உடையவர், ஒன்று சொல்லும்போது அப்பொழுதைய அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
73. அவை அஞ்சாமை · Not to dread the Council
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
உரை: கற்றார் யாவரினும் இவர் தெளிவாகக் கற்றவரென்று உலகத்தாரால் சொல்லப்படுபவர், கற்றார் நிறைந்த அவையில் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளுமாறு சொல்வார்.
74. நாடு · The Land
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
உரை: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் ஆகிய ஐந்தையும் நாட்டிற்கு அழகென்று சொல்வர்.
75. அரண் · The Fortification
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.
உரை: மணிபோலும் நிறத்தையுடைய நீரும், நிலமும், மலையும், நிழல்தரும் காடும் உள்ளதே நல்ல அரணாகும்.
76. பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.
உரை: தம் பகைவரது தருக்கினை அழிக்கும் கூரிய படைக்கலம் செல்வத்தைப்போன்று வேறொன்றும் இல்லையாதலால் ஒருவன் பொருளைப் பெருக்க வேண்டும்.
77. படை மாட்சி · The Excellence of an Army
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
உரை: வீரம், மானம், முன் வீரர் சென்ற நன்னெறியில் செல்லுதல், அரசனால் தேறப்படுதல் ஆகிய நான்கு குணங்களுமே ஒரு படைக்குப் பாதுகாப்பாகும்.
78. படைச் செருக்கு · Military Spirit
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
உரை: பகைவரோடு போரிடும் வீரமே பேராண்மை; பகைவருக்குத் தாழ்வு நேரும்போது அதனைத் தீர்க்க உதவும் ஊராண்மையே அதன் கூர்மை.
79. நட்பு · Friendship
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
உரை: அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவுவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
80. நட்பாராய்தல் · Investigation in forming Friendships
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.
உரை: கேடு நம் நண்பர்களை முழுமையாக அளக்கும் அளவுகோலாகும்; ஆதலால் கேட்டிலும் ஒரு நன்மை உண்டு.
81. பழைமை · Familiarity
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
உரை: நீண்டநாளைய நண்பர்கள் உரிமையால் செய்யும் செயல்களைச் சிறிதும் சிதையாது ஏற்கும் நட்பே பழைமை.
82. தீ நட்பு · Evil Friendship
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.
உரை: செயலும் சொல்லும் வேறுவேறாய் இருப்பவரது நட்பு நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.
83. கூடா நட்பு · Unreal Friendship
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.
உரை: பகைவர் தொழுத கைகளிலும் அழுத கண்ணீரிலும் படைக்கலம் மறைந்திருக்கலாம்.
84. பேதைமை · Folly
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.
உரை: தனக்குக் கேடுதருவனவற்றை ஏற்று, ஆக்கம் தருவனவற்றைக் கைவிடுவதே பேதைமை.
85. புல்லறிவாண்மை · Ignorance
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும்.
உரை: உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளை இல்லையென்று சாதிப்பவன் உலகில் காணப்படும் பேயென்று எண்ணப்படுவான்.
86. இகல் · Hostility
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்
உரை: எல்லா உயிர்களிடமும் கூடி வாழாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் நோயே இகல்.
87. பகை மாட்சி · The Might of Hatred
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.
உரை: தம்மினும் வலியவரைப் பகைத்தலைத் தவிர்க்க வேண்டும் என்பது இக்குறளின் முதன்மைக் கருத்து; பகைமை பற்றிய வள்ளுவரின் நடைமுறைப் பார்வையை இது காட்டுகிறது.
88. பகைத்திறம் தெரிதல் · Knowing the Quality of Hate
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
உரை: பகை என்னும் தீய பண்பை ஒருவன் விளையாட்டாகக்கூட விரும்பக் கூடாது.
89. உட்பகை · Enmity within
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.
உரை: மனப்பொருத்தம் இல்லாதவரோடு கூடி வாழ்வது ஒரு குடிலுக்குள் பாம்போடு கூடி வாழ்வதைப் போன்றது.
90. பெரியாரைப் பிழையாமை · Not Offending the Great
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும்.
உரை: ஆற்றலால் பெரியவரை மதியாது நடப்பவருக்கு அவரால் நீங்காத துன்பங்கள் விளையும்.
91. பெண்வழிச் சேறல் · Being led by Women
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது.
உரை: இன்பத்தைமட்டுமே நாடிக் கடமையை மறப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; செயல்முனைப்புடையோர் விரும்பாததும் அதுவே.
92. வரைவின் மகளிர் · Wanton Women
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.
உரை: அன்பால் அன்றிப் பொருளுக்காக மட்டுமே விரும்புவோரின் இனிய சொல் பின்னாளில் துன்பமே தரும்.
93. கள்ளுண்ணாமை · Not Drinking Palm-Wine
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
உரை: கள்ளுண்பவன் தெளிந்திருக்கும்போது மற்றொரு குடிகாரனைக் கண்டும், தானும் அவ்வாறுதான் சோர்வுறுவேன் என உணரமாட்டானோ?
94. சூது · Gambling
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
உரை: வெல்லமுடிந்தாலும் சூதை விரும்பக் கூடாது; அதில் வெல்லும் பொருள், இரையென்று எண்ணி மீன் தூண்டில் இரும்பை விழுங்கியது போன்றது. இணையவழிச் சூதாட்டங்கள் பெருகிய இன்றும் இது பொருந்தும்.
95. மருந்து · Medicine
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
உரை: உடலுக்கும் காலத்திற்கும் ஏற்ற உணவை அளவறிந்து உண்பவனுக்குப் பிணியால் துன்பம் நேராது.
96. குடிமை · Nobility
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.
உரை: நேர்மையும் நாணமும் ஒருங்கே இயல்பாக அமைவது நல்ல குடியில் வளர்ந்தவரிடமே.
97. மானம் · Honour
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.
உரை: ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமானை ஒத்தவர், மானம் அழிய நேர்ந்தால் அதைத் தாங்கமாட்டார்.
98. பெருமை · Greatness
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
உரை: எல்லா உயிர்களும் பிறப்பால் ஒத்தவை; செய்யும் தொழிலின் வேறுபாடே சிறப்பை வேறுபடுத்துகிறது.
99. சான்றாண்மை · Perfectness
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை.
உரை: செயலாற்றல் உடையாரின் ஆற்றல் பணிவுடைமையே; அந்தப் பணிவே சான்றோர் பகைவரையும் நண்பராக்கும் கருவி.
100. பண்புடைமை · Courtesy
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.
உரை: மனிதப் பண்பற்றவர் அரம்போன்ற கூரிய அறிவுடையராயினும் மரத்தையே ஒப்பர்.
101. நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல்.
உரை: வீடு நிறையப் பொருளைச் சேர்த்தும் அதனைத் துய்க்காதவன், அப்பொருளோடு உறவில்லாமையால் செத்தவனையே ஒப்பான்.
102. நாணுடைமை · Shame
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.
உரை: நன்மக்கள் நாணுவது இழிந்த செயலைச் செய்வதற்கே; மற்ற நாணம் அடக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே.
103. குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.
உரை: தன் குடியை உயர்த்தத் தொடங்கிய செயலை முடிக்காமல் விடேன் என்னும் உறுதியைப் போலச் சிறந்த பெருமை வேறில்லை.
104. உழவு · Farming
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.
உரை: உலகம் எத்தொழிலில் சுழன்றாலும் இறுதியில் ஏரையே சார்ந்து நிற்கிறது; எனவே உழவே தலைசிறந்த தொழில்.
105. நல்குரவு · Poverty
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.
உரை: வறுமையைப்போலத் துன்பம் தருவது வறுமையே; அதற்கு இணையான துன்பம் வேறில்லை.
106. இரவு · Mendicancy
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று.
உரை: கொடுக்கத் தக்கவரிடம் இரக்கலாம்; அவர் கொடாது மறைத்தால் அது அவருக்குப் பழியே; இரந்தவருக்குப் பழியாகாது.
107. இரவச்சம் · The Dread of Mendicancy
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
உரை: உலகில் சிலர் இரந்துதான் வாழ வேண்டும் என விதித்திருந்தால், அவ்வுலகைப் படைத்தவனே அலைந்து கெடுவானாக — வறுமைக்கு எதிரான வள்ளுவரின் சீற்றம்.
108. கயமை · Baseness
மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.
உரை: கயவர் உருவத்தில் மக்களையே முழுமையாக ஒத்திருப்பர்; இத்தகைய ஒப்புமையை வேறெங்கும் கண்டதில்லை.
மொழிபெயர்ப்புகள் © செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை · CC BY 4.0 · 22 மொழிகளில் திருக்குறள்





